குமரியில் அச்சுறுத்தும் வகையில் இருசக்கர வாகனம் ஓட்டி இடையூறு செய்த இளைஞர்களுக்கு பொதுமக்கள் தர்ம அடி

பொறுத்துப் பார்த்த மக்கள் வேறு வழியின்றி அந்த இளைஞர்களுக்கு தர்ம அடி கொடுத்து விரட்டி அடித்தனர்.
குமரி,
குமரி மாவட்டம், ஆலஞ்சி பகுதியில், கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடுவதாக கூறி இளைஞர்கள் சிலர் அச்சுறுத்தும் வகையில் அதிவேகமாக இருசக்கர வாகனம் ஓட்டி சாலையில் சென்ற வாகனங்களுக்கு இடையூறு ஏற்படுத்தியுள்ளனர்.
அந்த இளைஞர்களை அங்குள்ள மக்கள் எச்சரித்தபோதும், அவர்கள் கேட்காமல் தொடர்ந்து தங்கள் இருசக்கர வாகனங்களை ஆபத்தான முறையில் ஓட்டி அட்டகாசம் செய்துள்ளனர். இந்த நிலையில், பொறுத்துப் பார்த்த மக்கள் வேறு வழியின்றி அந்த இளைஞர்களுக்கு தர்ம அடி கொடுத்து அவர்களை விரட்டி அடித்தனர். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வரும் நிலையில், சம்பந்தப்பட்ட இளைஞர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story






