நாட்டு மக்கள் அனைவருக்கும் ரக்ஷாபந்தன் வாழ்த்துகள் - ஜி.கே.வாசன்

கோப்புப்படம்
நாட்டு மக்களிடையே அன்பும், ஒற்றுமையும், சகோதரத்துவமும், நற்பண்புகளும் மேலோங்க ரக்ஷா பந்தன் பண்டிகை வழிகாட்டட்டும் என ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.
சென்னை,
த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது,
நாட்டு மக்கள் அனைவருக்கும் ரக்ஷாபந்தன் வாழ்த்துகள். ரக்ஷாபந்தன் சகோதரர் சகோதரியாக அன்பை பரிமாறிக்கொள்ளும் பண்டிகையாக கொண்டாடப்படுவது வழக்கமானது. பெண்கள் அவர்களின் சகோதரருக்கும், சகோதரராக கருதுவோருக்கும் ராக்கி கயிறை கட்டி சகோதரத்துவத்தை வலுப்படுத்துவது பெருமைக்குரியது.
அந்த வகையில் இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் முழு நிலவு நாளில் 09.08.2025 அன்று நாடு முழுவதும் ரக்ஷா பந்தன் பண்டிகை கொண்டாடப்படுவது மகிழ்ச்சிக்குரியது. பெண்கள் தங்கள் சகோதரர்களும், சகோதரர்களாக கருதுவோர்களும் நலமுடன், வளமுடன், மகிழ்ச்சியுடன் வாழ வேண்டி அவர்களின் கையில் புனித கயிறு கட்டி அன்பை தெரிவிப்பார்கள். பதிலுக்கு சகோதரர்களும், சகோதரர்களாக பழகுபவர்களும் அன்பையும், பரிசையும் பரிமாறிக்கொள்வார்கள்.
நாட்டு மக்களிடையே அன்பும், ஒற்றுமையும், சகோதரத்துவமும், நற்பண்புகளும் மேலோங்க ரக்ஷா பந்தன் பண்டிகை வழிகாட்டட்டும். சகோதரர் சகோதரிகளாக அன்பைப் பரிமாறிக்கொள்ளும் விதமாக நல்லெண்ண பண்டிகையாக கொண்டாடப்படும் ரக்ஷா பந்தன் பண்டிகையை ஒட்டி நாட்டு மக்கள் அனைவருக்கும் தமிழ் மாநில காங்கிரஸ்(மூ) சார்பில் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.






