‘பொதுக்கூட்டம் நடத்த பாரபட்சமின்றி விதிமுறைகளை உருவாக்க வேண்டும்’- ஐகோர்ட்டு கருத்து

அனைத்து அரசியல் கட்சிகளின் கூட்டத்தை போலீசார் கூட்டி விதிகளை உருவாக்க வேண்டும் என போலீசார் தெரிவித்தனர்.
சென்னை,
ஈரோடு வடக்கு மாவட்ட பா.ம.க. செயலாளர் ஜெகதீசன், திருப்பூர் வடக்கு மாவட்ட பா.ம.க. செயலாளர் ரமேஷ் ஆகியோர் தங்கள் பகுதிகளில் பொதுக்கூட்டம் நடந்த போலீஸ் அனுமதி மறுப்பதாக சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர்.
இந்த மனுக்கள் நீதிபதி என்.சதீஷ்குமார் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது போலீஸ் தரப்பில், பொதுக்கூட்டம் நடத்தும் இடத்தையும், தேதியையும் மாற்றி மனுதாரர்கள் கொடுத்தால், பரிசீலிக்கப்படும்'' என்று கூறப்பட்டது. இதை பதிவு செய்து கொண்ட நீதிபதி, வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டார்.
பின்னர், “அனைத்து அரசியல் கட்சிகளின் கூட்டத்தை போலீசார் கூட்டி, பொதுக்கூட்டம் நடத்துவதற்கு பாரபட்சம் இல்லாத விதிமுறைகளை உருவாக்கவேண்டும்'' என்று கருத்து தெரிவித்தார்.
Related Tags :
Next Story






