சாய்ந்த நிலையில் இருந்த மின்கம்பம் சீரமைப்பு


சாய்ந்த நிலையில் இருந்த மின்கம்பம் சீரமைப்பு
x

இது குறித்த செய்தி ‘தினத்தந்தி’ நாளிதழில் வெளியானது.

திருவாரூர்,

கோட்டூர் ஒன்றியம் மீனம்பநல்லூர் - களப்பால் செல்லும் சாலையில் சீலத்தநல்லூர் பயணிகள் நிழலகம் அருகில் வயல் ஓரமாக மின் கம்பம் ஒன்று சாய்ந்த நிலையில் இருந்தது. தற்போது கோடை மழை மற்றும் சூறைக் காற்று அடிக்கடி வீசுவதால் இந்த மின் கம்பம் எந்த நேரத்திலும் கீழே விழுந்து விபத்து ஏற்படக்கூடிய அபாயத்தில் இருந்தது.

இது குறித்த செய்தி 'தினத்தந்தி' நாளிதழில் வெளியானது. இதைத்தொடர்ந்து பள்ளன்கோவில் மின்வாரிய அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டு மின்கம்பத்தை சரி செய்தனர். இதனால் அந்த பகுதி விவசாயிகளும் பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்தனர்.

மின்கம்பத்தை சரி செய்த அதிகாரிகள், ஊழியர்களுக்கும் செய்தி வெளியிட்ட 'தினத்தந்தி' நாளிதழுக்கும் அந்த பகுதி மக்கள் நன்றி தெரிவித்து உள்ளனர்.

1 More update

Next Story