சாத்தூர்: பட்டாசு வெடிவிபத்தில் 3 பேர் பலி; ஒருவர் படுகாயம்

கோப்புப்படம்
வெடிவிபத்தில் காயமடைந்த நபர் சிவகாசி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.
சாத்தூர்,
விருதுநகரில் சாத்தூர் பகுதியில் வெம்பக்கோட்டை அருகே விஜயகரிசல்குளம் என்ற இடத்தில் வீடு ஒன்றில் சிலர் பட்டாசு தயாரித்தனர். அப்போது, வெடி மருந்துகள் திடீரென வெடித்ததில் தீப்பற்றி கொண்டது. அது மளமளவென பரவி பட்டாசுகள் வெடித்து சிதறின.
இந்த சம்பவத்தில் சிக்கி 3 பேர் உயிரிழந்தனர். ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார். இதுபற்றி தகவல் அறிந்து வந்த போலீசார் அவரை மீட்டனர். இதன்பின்னர், அவர் சிவகாசி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். கடந்த ஒரு மாதத்தில் ஏற்பட்ட 4 வெடிவிபத்துகளில் 16 பேர் உயிரிழந்தனர்.
Related Tags :
Next Story






