பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் கைது...?


பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் கைது...?
x
தினத்தந்தி 13 Dec 2025 9:59 AM IST (Updated: 13 Dec 2025 11:53 AM IST)
t-max-icont-min-icon

பிரபல யூடியூபரும், அரசியல் விமர்சகருமாக திகழ்பவர் சவுக்கு சங்கர்.

சென்னை

பிரபல யூடியூபரும், அரசியல் விமர்சகருமாக திகழ்பவர் சவுக்கு சங்கர். இவர் தனது யூடியூப் பக்கத்தில் அரசியல் தொடர்பான பல்வேறு கருத்துக்களை விவாதித்து வருகிறார்.

இந்நிலையில், யூடியூபர் சவுக்கு சங்கரை கைது செய்ய போலீசார் அவரின் வீட்டிற்கு இன்று காலை சென்றனர். பட தயாரிப்பாளரை மிரட்டியதாக பதியப்பட்ட வழக்கில் சவுக்கு சங்கரை போலீசார் கைது செய்ய போலீசார் நடவடிக்கை எடுத்தனர். ஆதம்பாக்கத்தில் உள்ள சவுக்கு சங்கரின் வீட்டிற்கு சென்ற போலீசார் அவரை வீட்டில் வைத்தே கைது செய்ய முயன்றனர். ஆனால், தனது வழக்கறிஞர்கள் வந்த பின்னரே வீட்டின் கதவுகளை திறப்பேன் என்று சவுக்கு சங்கர் கூறினார்.

இதையடுத்து, சவுக்கு சங்கரின் வீட்டு வாசலிலேயே போலீசார் காத்திருந்தனர். அதன் பின்னர், சவுக்கு சங்கர் வீட்டிற்கு அவரது வழக்கறிஞர்கள் வந்தனர். அப்போது, கைது நடவடிக்கைக்கான காரணம் என்ன? என போலீசாரிடம் சவுக்கு சங்கர் வழக்கறிஞர்கள் கேள்வி எழுப்பினர்.

தற்போதுவரை சவுக்கு சங்கர் கைது செய்யப்படவில்லை. வீட்டின் கதவை சவுக்கு சங்கர் பூட்டியுள்ளதாகவும், தீயணைப்புத்துறையினர் உதவியுடன் வீட்டின் கதவை உடைத்து சவுக்கு சங்கரை கைது செய்ய போலீசார் திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இந்த நிகழ்வு தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

அதேவேளை, சென்னை மாநகர ஆணையர் அருண், பினாமி மூலம் சொத்துகள் வாங்கி பல கோடி ரூபாய் முதலீடுகள் செய்துள்ள விவரங்களை நேற்று வெளியிட்டதாலேயே தன்னை இன்று கைது செய்ய போலீசார் முயற்சிப்பதாக சவுக்கு சங்கர் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

1 More update

Next Story