ராமேஸ்வரத்தில் திடீரென உள்வாங்கிய கடல்

ராமேசுவரம் துறைமுக கடல் பகுதியில் நேற்று வழக்கத்திற்கு மாறாக கடல் உள்வாங்கி காணப்பட்டது.
ராமேஸ்வரத்தில் திடீரென உள்வாங்கிய கடல்
Published on

ராமநாதபுரம்,

முக்கிய புனித தலங்களில் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கேவில் ஒன்றாகும். ஆண்டுதேறும் ஏராளமான பக்தர்கள் இங்கு வந்து செல்கின்றனர். தமிழ்நாடு மட்டுமின்றி வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். ராமேஸ்வரம் முக்கிய சுற்றுலா தலமாக உள்ளது.

இந்த நிலையில், ராமேசுவரம் துறைமுக கடல் பகுதியில் நேற்று வழக்கத்திற்கு மாறாக கடல் உள்வாங்கி காணப்பட்டது. இதனால் மணல் பரப்பாக தெரிந்த கடற்கரை பரப்பில் தரைதட்டி நின்றது. சிறிது நேரத்தில் இயல்பு நிலைக்கு வந்துவிடும் என கடல்வள ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com