'கூலிப்படைகள் மீது தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும்' - கார்த்தி சிதம்பரம் எம்.பி.


கூலிப்படைகள் மீது தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் - கார்த்தி சிதம்பரம் எம்.பி.
x
தினத்தந்தி 23 March 2025 11:59 AM IST (Updated: 23 March 2025 12:00 PM IST)
t-max-icont-min-icon

கூலிப்படைகள் மீது தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கார்த்தி சிதம்பரம் எம்.பி. தெரிவித்துள்ளார்.

சென்னை

தமிழகத்தில் கூலிப்படைகள் நடத்தும் கொலை சம்பவங்களால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளதாக கார்த்தி சிதம்பரம் எம்.பி. தெரிவித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது;-

"தமிழகத்தில் கூலிப்படை கொலைகள் அதிகரித்துள்ளன. காரைக்குடியில் குற்றப்பின்னணி கொண்டவர் ஒருவர் திட்டமிட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். அதே போல் திருநெல்வேலியில் முன்னாள் காவல்துறை அதிகாரி ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

கூலிப்படைகள் நடத்தும் கொலை சம்பவங்களால் தமிழக அமக்கள் அச்சமடைந்துள்ளனர். திடீர் மோதல் காரணமாக நடக்கும் கொலைகளை தடுக்க முடியாது. ஆனால் கூலிப்படை மூலம் திட்டம் தீட்டி கொலை செய்கின்றனர். உளவுத்துறை மூலம் அரசாங்கம் இதனை கண்காணித்து, கூலிப்படைகள் மீது தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும்."

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

1 More update

Next Story