20 ஆண்டுகளுக்கு முன்பே அரசியலுக்கு வந்திருக்க வேண்டும்: கமல்ஹாசன் ஆதங்கம்


20 ஆண்டுகளுக்கு முன்பே அரசியலுக்கு வந்திருக்க வேண்டும்: கமல்ஹாசன் ஆதங்கம்
x

20 ஆண்டுகளுக்கு முன்பே அரசியலுக்கு வந்திருக்க வேண்டும். அப்படியே முன்பே அரசியலுக்கு வந்திருந்தால் நாம் இன்று பேசியிருக்க வேண்டிய இடம் மாறி இருக்கும் என்று கமல்ஹாசன் கூறினார்.

சென்னை,

சென்னை ஆழ்வார்பேட்டையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் 8 ஆம் ஆண்டு தொடக்க விழா நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் உரையாற்றினர். அப்போது அவர் பேசியதாவது: - ''மக்கள் நீதி மய்யத்தின் குரல் சட்டமன்றத்தில் ஒலிக்கும். எந்த மொழி வேண்டும் எந்த மொழி வேண்டாம் என்பது தமிழனுக்கு தெரியும். ரசிகர்கள் வேறு வாக்காளர்கள் வேறு என்பதை எனது அனுபவத்தில் தெரிந்து கொண்டேன். 20 ஆண்டுக்கு முன்பே அரசியலுக்கு வந்திருக்க வேண்டும்.

அப்படியே முன்பே அரசியலுக்கு வந்திருந்தால் நாம் இன்று பேசியிருக்க வேண்டிய இடம் மாறி இருக்கும். வராதது என் தோல்விதான். இந்த ஆண்டு நமது குரல் நாடாளுமன்றத்தில் ஒலிக்கப் போகிறது. நம்மை இணைப்பது தமிழ் மொழி தான். தன்னம்பிக்கையுடன் நாம் உயிர்த்திருக்க தமிழக மக்களே காரணம். மொழிக்காக உயிர் விட்டவர்கள் தமிழர்கள்.காந்தியைப் போன்று பெரியாரையும் எனக்கு பிடிக்கும். பெரியாரே காந்தியின் சிஷ்யன் தான். சட்டமன்றத்தில் நமது குரல் ஒலிக்கப் போகிறது. அதற்கு கட்டியம் கூறுவது தான் இந்த விழா" இவ்வாறு அவர் கூறினார்.

1 More update

Next Story