தோளில் பொருத்தப்பட்ட பிளேட் அகற்றம்: மருத்துவமனையில் இருந்து வைகோ வீடு திரும்பினார்


தோளில் பொருத்தப்பட்ட பிளேட் அகற்றம்: மருத்துவமனையில் இருந்து வைகோ வீடு திரும்பினார்
x

கோப்புப்படம் 

வைகோவுக்கு தோளில் பொருத்தப்பட்ட பிளேட் அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டது.

சென்னை,

ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, கன்னியாகுமரியில் ஒரு திருமண விழாவில் பங்கேற்பதற்காக கடந்த மே மாதம் 25-ந்தேதி நெல்லை மாவட்டத்துக்கு சென்றார். அங்கு வீட்டின், திண்ணையில் ஏறும்போது திடீரென நிலைதடுமாறி கீழே விழுந்ததில், அவரின் தோளில் எலும்பு முறிவு ஏற்பட்டது.

இதையடுத்து, சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தொடர் சிகிச்சை வழங்கப்பட்டது. அதே மாதம் அறுவை சிகிச்சை செய்து தோளில், 'டைட்டானியம் பிளேட்' பொருத்தப்பட்டது.

இந்த நிலையில், தோளில் பொருத்தப்பட்ட 'டைட்டானியம் பிளேட்' அகற்றுவதற்காக வைகோ நேற்று முன்தினம் இரவு அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை மூலம் பிளேட் அகற்றப்பட்டது. இதைத் தொடர்ந்து, அவர் நேற்று மாலை வீடு திரும்பினார்.

1 More update

Related Tags :
Next Story