சென்னை எழும்பூர் - சார்லபள்ளி இடையே சிறப்பு ரெயில்

இந்த சிறப்பு ரெயிலுக்கான முன்பதிவு தொடங்கிவிட்டது.
சென்னை,
தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
சென்னை எழும்பூர் - தெலுங்கானா மாநிலம் சார்லபள்ளி இடையே சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது. சென்னை எழும்பூரில் இருந்து இன்று (சனிக்கிழமை) இரவு 11.55 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (06019) நாளை மதியம் 2 மணிக்கு சார்லபள்ளியை சென்றடைகிறது.
மறுமார்க்கத்தில், சார்லபள்ளியில் இருந்து நாளை (ஞாயிற்றுக்கிழமை) மாலை 6 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (06020) மறுநாள் காலை 8.30 மணிக்கு சென்னை எழும்பூரை வந்தடைகிறது. இந்த சிறப்பு ரெயில் கூடூர், நெல்லூர், தெனாலி, குண்டூர் வழியாக இயக்கப்படுகிறது. இந்த சிறப்பு ரெயிலுக்கான முன்பதிவு தொடங்கிவிட்டது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story






