தசரா, தீபாவளியையொட்டி மைசூரு -நெல்லை இடையே சிறப்பு ரெயில்


தசரா, தீபாவளியையொட்டி மைசூரு -நெல்லை இடையே சிறப்பு ரெயில்
x
தினத்தந்தி 13 Sept 2025 1:15 AM IST (Updated: 13 Sept 2025 1:15 AM IST)
t-max-icont-min-icon

பயணிகள் கூட்ட நெரிசலை சமாளிக்கும் விதமாக சிறப்பு ரயில் அறிவிக்கப்பட்டுள்ளது.

நெல்லை,

தசரா மற்றும் தீபாவளி பண்டிகையையொட்டி ரெயில்வே பல்வேறு சிறப்பு ரெயில்களை அறிவித்து வருகிறது. இதில் ஒரு பகுதியாக மைசூரு -நெல்லை இடையே சிறப்பு ரெயில் அறிவிக்கப்பட்டு உள்ளது. வருகிற 15-ந்தேதி முதல் நவம்பர் மாதம் 24-ந்தேதி வரை மைசூரில் இருந்து திங்கட்கிழமை தோறும் இரவு 8.15 மணிக்கு (வண்டி எண் 06239) புறப்படுகிறது. இந்த ரெயில் மறுநாள் காலை 10.50 மணிக்கு நெல்லையை வந்தடைகிறது. மறுமார்க்கத்தில் வருகிற 16-ந்தேதி முதல் நவம்பர் மாதம் 25-ந்தேதி வரை செவ்வாய்க்கிழமை தோறும் நெல்லையில் இருந்து (06240) பிற்பகல் 3.40 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 5.40 மணிக்கு மைசூருவை சென்றடைகிறது.

இந்த ரெயில் மாண்டியா, ராமநகரம், கெங்கேரி, கே.எஸ்.ஆர். பெங்களூரு, பெங்களூரு கண்டோன்மென்ட், கிருஷ்ணராஜபுரம், பங்காருபேட்டை, சேலம், நாமக்கல், கரூர், திண்டுக்கல், கொடைக்கானல் ரோடு, மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி ஆகிய நிலையங்களில் நின்று செல்லும்.இந்த ரெயிலில் ஒரு இரண்டடுக்கு ஏ.சி. பெட்டி, 3 மூன்றடுக்கு ஏ.சி. பெட்டிகள், 10 இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி பெட்டிகள், 4 பொது பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும். இந்த தகவலை தென்மேற்கு ரெயில்வே தெரிவித்து உள்ளது.

1 More update

Next Story