கரூர் வழியாக மைசூரு- தூத்துக்குடி இடையே சிறப்பு ரெயில் இயக்கம்


கரூர் வழியாக மைசூரு- தூத்துக்குடி இடையே சிறப்பு ரெயில் இயக்கம்
x

கிறிஸ்துமஸ் பண்டிகை மற்றும் புத்தாண்டை முன்னிட்டு பயணிகளின் வசதிக்காக சிறப்பு ரெயில் இயக்கப்பட்டு வருகிறது.

கரூர்,

தெற்கு ரெயில்வே சேலம் கோட்டம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, வருகிற கிறிஸ்துமஸ் பண்டிகை மற்றும் புத்தாண்டை முன்னிட்டு பயணிகளின் வசதிக்காக கரூர் வழியாக மைசூரு- தூத்துக்குடி இடையே சிறப்பு ரெயில் இயக்கப்பட உள்ளது. இதில் மைசூருவில் இருந்து இயக்கப்பட உள்ள சிறப்பு ரெயிலானது வருகிற 23 மற்றும் 27-ந் தேதிகளில் இயக்கப்பட உள்ளது.

அதன்படி மைசூரு- தூத்துக்குடி சிறப்பு ரெயிலானது (வண்டி எண்: 06283) வருகிற 23 மற்றும் 27-ந் தேதிகளில் மாலை 6.35 மணிக்கு மைசூருவில் இருந்து புறப்பட்டு வரும். இந்த ரெயிலானது அடுத்த நாள் (24 மற்றும் 28-ந் தேதிகளில்) காலை 5.18 மணிக்கு கரூர் ரெயில் நிலையத்தை வந்தடையும். பின்னர் கரூரில் இருந்து காலை 5.20 மணிக்கு புறப்பட்டு செல்லும். தொடர்ந்து இந்த ரெயில் திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, டூட்டி மேலூர் வழியாக காலை 11 மணிக்கு தூத்துக்குடியை சென்றடையும்.

இதேபோல மறுமார்க்கத்தில் தூத்துக்குடியில் இருந்து வரும் சிறப்பு ரெயிலானது வருகிற 24 மற்றும் 28-ந் தேதிகளில் இயக்கப்பட உள்ளது. அதன்படி தூத்துக்குடி- மைசூரு சிறப்பு ரெயிலானது (வண்டி எண்: 06284) தூத்துக்குடியில் இருந்து மதியம் 2 மணிக்கு புறப்பட்டு வரும்.

இந்த ரெயிலானது அன்று இரவு 8.15 மணிக்கு கரூரை வந்தடையும். தொடர்ந்து சிறப்பு ரெயிலானது கரூர் ரெயில் நிலையத்தில் இருந்து இரவு 8.17 மணிக்கு புறப்பட்டு செல்லும். இதனையடுத்து இந்த ரெயில் நாமக்கல், சேலம், தர்மபுரி, ஓசூர், பெங்களூரு கண்டோன்மெண்ட், கே.எஸ்.ஆர் பெங்களூரு சிட்டி, மாண்டியா வழியாக அடுத்த நாள் (25 மற்றும் 29-ந்தேதிகளில்) காலை 7.45 மணிக்கு மைசூரை சென்றடையும்.

1 More update

Next Story