‘மாணவர்கள் அப்துல் கலாமுக்கு செலுத்தும் நன்றிக்கடன்..’ - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட பதிவு

திராவிட மாடல் அரசு செயல்படுத்தி வரும் திட்டங்களை மாணவர்கள் நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை,
இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி ஏ.பி.ஜே.அப்துல் கலாமின் பிறந்தநாளையொட்டி, தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது;-
“எப்படிப்பட்ட தடையையும் கல்வியைக் கொண்டு கடந்திடலாம், வாழ்வில் உயர்ந்திடலாம் என்று வாழ்ந்து காட்டிய அறிவியல் மேதை, முன்னாள் ஜனாதிபதி, பாரத ரத்னா அப்துல் கலாம் அவர்களின் பிறந்தநாள்!
உயர்கல்விக்காக நமது திராவிட மாடல் அரசு செயல்படுத்தி வரும் திட்டங்களை நமது மாணவர்கள் நன்கு பயன்படுத்திக் கொண்டு, இந்தியாவின் முன்னேற்றத்துக்கும், தன்னிறைவுக்கும் உழைத்தால், அதுதான் அப்துல் கலாம் அவர்களுக்குச் செலுத்தும் மிகச்சிறந்த நன்றிக்கடன்.”
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story






