‘கோவைக்கு மெட்ரோ வரக்கூடாது என்ற எண்ணத்தில் தமிழக அரசு அறிக்கை அனுப்பியுள்ளது’ - நயினார் நாகேந்திரன்


‘கோவைக்கு மெட்ரோ வரக்கூடாது என்ற எண்ணத்தில் தமிழக அரசு அறிக்கை அனுப்பியுள்ளது’ - நயினார் நாகேந்திரன்
x

மெட்ரோ திட்டம் நிராகரிக்கபடவில்லை, திருப்பி மட்டும்தான் அனுப்பப்பட்டுள்ளது என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

நெல்லை,

பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் நெல்லையில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது;-

“மெட்ரோ திட்டம் நிராகரிக்கபடவில்லை திருப்பி மட்டும்தான் அனுப்பப்பட்டுள்ளது. 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பு அடிப்படையில் தமிழக அரசு DPR அறிக்கை கொடுத்துள்ளது. மெட்ரோ திட்டத்திற்கு தனியாக கொள்கை இருக்கிறது. ஒரு நகரத்தில் குறிப்பிட்ட அளவு மக்கள் தொகை இருக்க வேண்டும், ரெயில் நிலையத்திற்கு தேவையான இடம் இருக்க வேண்டும் என்பன உள்ளிட்ட நிபந்தனைகள் இருக்கின்றன.

ஆனால் தி.மு.க. அரசு இதனை DPR அறிக்கையில் முறையாக தெரிவிக்கவில்லை. கொங்கு மண்டலத்தில் இருக்கும் கோவைக்கு மெட்ரோ வரக்கூடாது என்ற எண்ணத்தில் தமிழக அரசு மத்திய அரசுக்கு அறிக்கை அனுப்பியுள்ளது.”

இவ்வாறு நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

1 More update

Next Story