நொய்யல் ஆத்துப்பாளையம் நீர்த்தேக்கத்தில் இருந்து நாளை முதல் தண்ணீர் திறப்பு


நொய்யல் ஆத்துப்பாளையம் நீர்த்தேக்கத்தில் இருந்து நாளை முதல் தண்ணீர் திறப்பு
x

தண்ணீர் திறப்பால் 19 ஆயிரத்து 480 ஏக்கர் பாசன நிலங்கள் பயன்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

ஈரோடு

கரூரில் நொய்யல் ஆத்துப்பாளையம் நீர்த்தேக்கத்தில் இருந்து நாளை முதல் 61 நாட்களுக்கு தண்ணீர் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக நீர்வளத்துறை செயலாளர் வெளியிட்ட அறிக்கையில்,

கரூர் மாவட்டம், புகளுர் வட்டம், நொய்யல் ஆத்துப்பாளையம் நீர்த்தேக்கத்திலிருந்து நொய்யல் கால்வாய்க்குட்பட்ட பாசன நிலங்களுக்கு 30.12.2025 முதல் 28.02.2026 வரையிலான 61 நாட்களுக்கு சிறப்பு நனைப்பிற்கு (Special Wetting) மொத்தம் 210.82 மில்லியன் கன அடிக்கு மிகாமல், தண்ணீர் திறந்து விட அரசு ஆணையிட்டுள்ளது. இதனால், கரூர் மாவட்டம், புகளூர் மற்றும் மண்மங்கலம் ஆகிய வட்டங்களிலுள்ள 19 ஆயிரத்து 480 ஏக்கர் பாசன நிலங்கள் பயன்பெறும் ‘ இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 More update

Next Story