தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய தலைமை அலுவலகம் - புதிய விலாசத்திற்கு மாற்றம்


தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய தலைமை அலுவலகம் - புதிய விலாசத்திற்கு மாற்றம்
x

வீட்டு வசதி வாரியத்தின் தலைமை அலுவலகம் 13-ந்தேதி வரை கோயம்பேட்டில் இயங்கி வந்தது.

சென்னை,

தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய தலைமை அலுவலகம் புதிய விலாசத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;-

"தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய தலைமை அலுவலகம் சி.எம்.டி.ஏ. வளாகம், இ & சி மார்க்கெட் ரோடு, கோயம்பேடு, சென்னை-600 107 என்ற விலாசத்தில் 13.07.2025 வரை இயங்கி வந்தது.

தற்போது தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்திற்கு சொந்தமான கீழ்கண்ட விலாசத்தில் 14.07.2025 முதல் இயங்கி வருகிறது. தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய பயனாளிகள் மற்றும் பயனடைய விரும்புவோர் கீழ்கண்ட விலாசத்தில் உள்ள தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய தலைமை அலுவலகத்தினை அணுகிடுமாறு மேலாண்மை இயக்குநரால் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம், பாக்கெட் VI, வாரிய அலுவலகம் மற்றும் வணிக வளாகம், சி.ஐ.டி நகர், முதல் பிரதான சாலை, சென்னை - 600035."

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 More update

Next Story