திறமையாளர்களுக்கு தமிழ்நாடு விளையாட்டுத் துறை என்றென்றும் பக்கபலமாக இருக்கும்: உதயநிதி ஸ்டாலின்

கார்த்திகா மற்றும் அபினேஷுக்கு தலா ரூ.25 லட்சத்தை முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் வழங்கினார்
சென்னை,
துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
விளையாட்டுக்குப் பேர் போன திருவாரூர் மாவட்டம் வடுவூர் மண்ணிலிருந்து மேலும் ஒரு சாதனையாளராக உருவெடுத்திருக்கிறார் தம்பி அபினேஷ் மோகன்தாஸ்.
தேனியில் உள்ள SDAT விடுதியின் மாணவரான தம்பி அபினேஷ் கபடியில் இன்னும் பல உயரங்களை தொட வேண்டுமென்று பாராட்டினோம்.அபினேஷ் போன்ற திறமையாளர்களுக்கு தமிழ்நாடு விளையாட்டுத் துறை என்றென்றும் பக்கபலமாக இருக்கும்.
கண்ணகி நகர் கார்த்திகா. கடந்த சில நாட்களாக தமிழ்நாடு பெருமிதத்தோடு கொண்டாடிக் கொண்டிருக்கும் பெயர்.பஹ்ரைனில் நடைபெற்ற ஆசிய இளையோர் விளையாட்டு மகளிர் கபடி போட்டியில் சாதித்துவிட்டு இன்று தாயகம் திரும்பி இருக்கிறார்.
கபடி ஆட்டத்தில் புயல் போன்ற திறமையை வெளிப்படுத்தி, இன்னும் பல பெண்கள், விளையாட்டை நோக்கி வருவதற்கான Role Model-ஆக இருக்கும் தங்கை கார்த்திகாவை நாம் பாராட்டினோம்.அவரது வெற்றிப்பயணம் தொடர என்றும் துணை நிற்போம்.என தெரிவித்துள்ளார்.
முன்னதாக கார்த்திகா மற்றும் அபினேஷுக்கு தலா ரூ.25 லட்சத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது






