திருவாரூர் மாவட்டத்தில் 1-ந் தேதி டாஸ்மாக் மூடல்


திருவாரூர் மாவட்டத்தில் 1-ந் தேதி டாஸ்மாக் மூடல்
x

சில்லறை விற்பனை கடைகள், உரிமம் பெற்ற மதுபானம் அருந்தும் கூடங்கள் அனைத்தையும் மூட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருவாரூர்,

திருவாரூர் மாவட்ட கலெக்டர் மோகனச்சந்திரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

சென்னை மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை ஆணையர் அறிவுறுத்தலின்படி வள்ளலார் நினைவு தினத்தை முன்னிட்டு வருகிற 1-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) டாஸ்மாக் விடுமுறை தினமாகும். அன்றைய நாளில் திருவாரூர் மாவட்டத்தில் அமைந்துள்ள மதுபான கூடங்களுடன் இணைந்த மற்றும் மதுபான கூடங்கள் இல்லாமல் இயங்கும் டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனை கடைகள் மற்றும் உரிமம் பெற்ற மதுபானம் அருந்தும் கூடங்கள் அனைத்தையும் மூட வேண்டும்.

மேற்படி ஆணையை செயல்படுத்த தவறும் பட்சத்தில் தொடர்புடைய டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனை கடைகளின் மேற்பார்வையாளர்கள் மற்றும் உரிமம் பெற்ற மதுபான கூடங்களின் உரிமைதாரர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

1 More update

Next Story