கொள்கைத் தலைவர் வேலு நாச்சியார் பிறந்த நாள் - ஆதவ் அர்ஜுனா புகழாரம்


கொள்கைத் தலைவர் வேலு நாச்சியார் பிறந்த நாள் - ஆதவ் அர்ஜுனா புகழாரம்
x

சமத்துவ ஆட்சியை வழங்கிய சரித்திர புகழ் கொண்டவர் வேலு நாச்சியார் என ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார்.

சென்னை,

தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் பிரசார மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது:

தமிழ் நிலத்தின் பேரரசி, இந்தியத் திருநாட்டின் முதல் பெண் விடுதலைப் போராட்ட வீரர் வீரமங்கை வேலு நாச்சியார். தாய் மண்ணைக் காக்கத் தன்னிகரற்ற போரை நடத்தியவர். சமத்துவ ஆட்சியை வழங்கிய சரித்திர புகழ் கொண்டவர். சமூக நல்லிணக்கத்தைப் போற்றிய பண்பாளர்.

பல மொழிகள் பேசும் திறன் உட்பட பல்வேறு நுட்பமான விஷயங்களில் பேராளுமையாகத் திகழ்ந்தவர். நமது கொள்கைத் தலைவர் வீரமங்கை வேலு நாச்சியார் பிறந்த நாளான இன்று, அவர் புகழைப் போற்றுவோம்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 More update

Next Story