கல்லூரி வரை வன்முறையின் கோரத்தைப் படறவிட்ட திமுக அரசு - நயினார் நாகேந்திரன்

மாணவியை சக மாணவன் கத்தியால் குத்திய செய்தி மிகுந்த அதிர்ச்சியளிப்பதாக நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
கல்லூரி வரை வன்முறையின் கோரத்தைப் படறவிட்ட திமுக அரசு - நயினார் நாகேந்திரன்
Published on

சென்னை,

தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-

கோவை சரவணம்பட்டி பகுதியில் கல்லூரி வளாகத்தில் மாணவி ஒருவரை சக மாணவன் கத்தியால் குத்தியதாக வெளிவந்துள்ள செய்தி மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது.

பெண்பிள்ளை எந்தவொரு கயவனிடமும் சிக்கி விடக்கூடாது, ஆண்பிள்ளை எந்த போதை அரக்கன் பிடியிலும் சிக்கிவிடக்கூடாது என்ற பயத்தை மனதில் வைத்துக்கொண்டு, பிள்ளைகள் படித்து முன்னேற வேண்டும் எனக் கல்வி நிலையங்களுக்கு அனுப்புகின்றனர் பெற்றோர். ஆனால், சீரழிந்து வரும் சட்டம் ஒழுங்கினால் வன்முறையின் கோர நிழலைக் கல்வி நிலையங்கள் வரை கொண்டு நிறுத்தி கொடூரக் கொலைக் கூடாரங்களாக மாற்றி, நம் பிள்ளைகளின் எதிர்காலத்தைச் சிதைத்து வருகிறது இந்தத் திமுக ஆட்சி.

கோபாலபுர வாரிசுகளைத் தூக்கிபிடிப்பதற்காக விளம்பர அரசியலில் மூழ்கி, தமிழக வாரிசுகளை வன்முறையின் வசப்படுத்தி, அவர்கள் வாழ்வை சின்னாபின்னமாக்கிய பாவமே திமுக அரசின் சிதைவுக்கு வழிவகுக்கும்!

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com