திருமணத்துக்கு பெண் பார்த்ததால் விபரீதம்; திருநங்கைகளுடன் பழக்கம் - மாத்திரைகள் சாப்பிட்ட வாலிபருக்கு நேர்ந்த கதி

ராஜ்குமாருக்கு திருமணம் செய்து வைக்க பெண் பார்க்கத் அவரது பெற்றோர் தொடங்கியுள்ளனர்.
திருமணத்துக்கு பெண் பார்த்ததால் விபரீதம்; திருநங்கைகளுடன் பழக்கம் - மாத்திரைகள் சாப்பிட்ட வாலிபருக்கு நேர்ந்த கதி
Published on

திருச்சி,

திருச்சி புங்கனூர் கிராமம் கலியன் காடு வடக்கு வீதியை சேர்ந்தவர் கொன்னாச்சி (வயது 56) இவரது மனைவி தனலட்சுமி (45). இவர்களது மகன் ராஜ்குமார் (29). இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. ராஜ்குமார் பெயிண்டிங் வேலை பார்த்து வந்தார். வேலைக்கு சென்ற இடத்தில் திருநங்கைகளுடன் பழகி வந்ததாக கூறப்படுகிறது. இதனால் அவரது நடை உடை பாவனைகள் மாறியது. வீட்டில் இருக்கும் போது பெண்களுக்கான ஆடைகளை அணிந்து ரசித்து வந்தார். இதைப் பார்த்து பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். கடந்த சில மாதங்களாக ராஜ்குமார் திருநங்கையாக மாற ஆபரேஷன் செய்து கொள்ள முயற்சி மேற்கொண்டார்.

அதிர்ச்சி இதனால் அடைந்த அவரது குடும்பத்தினர் அவரை கண்டித்தனர். மேலும் அவருக்கு திருமணம் செய்து வைக்க பெண் பார்க்கத் தொடங்கியுள்ளனர். இந்த நிலையில் 2 நாட்களுக்கு முன்பு கலிங்காட்டிலுள்ள கொன்னாச்சி வீட்டிலிருந்து யாரும் வெளியே சந்தேகம் வராததால் அடைந்த அக்கம் பக்கத்தினர் உள்ளே சென்று பார்த்த போது ராஜ்குமார் மற்றும் அவரது தந்தை கொன்னாச்சி தாய் தனலட்சுமி ஆகியோர் கட்டிலில் மயங்கிய நிலையில் கிடந்தனர். 3 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு ராஜ்குமார் பரிதாபமாக உயிரிழந்தார். அவரது தாய், தந்தை இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

பின்னர் போலீசார் அவர்களிடம் நடத்திய சோதனையில் அங்கு வீட்டில் ஹார்மோன் மாற்றத்துக்காக மாத்திரைகள் அதிகம் இருப்பது கண்டெடுக்கப்பட்டது. ராஜ்குமார் ஹார்மோன் மாத்திரைகள் அதிகம் சாப்பிட்டதால் அவரது சிறுநீரகம் பாதித்து இறந்திருக்கலாம் அல்லது திருநங்கையாக மாற தடை போட்டதால் மெதுவாக கொல்லும் விஷம் சாப்பிட்டு இருக்கலாம் சந்தேகிக்கப்படுகிறது.

அவரது பெற்றோர் ஏற்கனவே உயர் ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை வியாதியால் அவதிப்பட்டு வந்துள்ளனர். அவர்களுக்கும் மெதுவாக கொல்லும் விஷம் கொடுத்து இருக்கலாம் சந்தேகிக்கப்படுகிறது. இதுகுறித்து சோம ரசம்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் .

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com