தென்னை விவசாயிகளுக்குத் தோள் கொடுக்கும் பிரதமர் மோடி அரசு - நயினார் நாகேந்திரன்

பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக விவசாயிகள் சார்பாக மனமார்ந்த நன்றிகளை நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
சென்னை,
தமிழக பாஜக தலைவர் நயினார் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-
பாரதப் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் மில்லிங் கொப்பரைக்கான குறைந்தபட்ச ஆதார விலையைக் குவிண்டாலுக்கு ரூ.445-ம், பால் கொப்பரைக்கான குறைந்தபட்ச ஆதார விலையைக் குவிண்டாலுக்கு ரூ.400-ம் உயர்த்த ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது.
வெள்ளை ஈ தாக்குதலாலும், வாடல் நோயாலும் பரிதவித்து வரும் தென்னை விவசாயிகளின் துயர் துடைத்து, அவர்களின் நல்வாழ்வுக்கு வழிவகுக்கும் வண்ணம் கொப்பரைத் தேங்காய்க்கான ஆதார விலையை உயர்த்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக விவசாயிகள் சார்பாக மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story






