'தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி மாலை சூடும்' - நயினார் நாகேந்திரன்


தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி மாலை சூடும் - நயினார் நாகேந்திரன்
x

தமிழகத்தில் பாலியல் குற்ற சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவதாக நயினார் நாகேந்திரன் குற்றம் சாட்டியுள்ளார்.

சென்னை,

தமிழகம் முழுவதும் பா.ஜ.க. பூத் கமிட்டியை வலிமைப்படுத்தும் விதமாக சென்னை காட்டாங்குளத்தூரில் பா.ஜ.க. மாநில பயிலரங்கம் இன்று நடைபெற்றது. இதில் பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது;-

"சட்டமன்ற தேர்தலில் நிச்சயமாக தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி மாலை சூடும். வெற்றிகரமாக நடைபெற்ற முருகன் மாநாடு யாரும் எதிர்பார்க்காதது. தமிழகத்தில் தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்ற பின் இதுவரை 24 காவல் மரணங்கள் நடைபெற்றுள்ளன. மேலும் தமிழகத்தில் பாலியல் குற்ற சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன."

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

1 More update

Next Story