அரசியலில் நிரந்தர எதிரியும், நண்பனும் இல்லை: பிரேமலதா விஜயகாந்த் பேட்டி


அரசியலில் நிரந்தர எதிரியும், நண்பனும் இல்லை:   பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
x
தினத்தந்தி 10 Sept 2025 2:15 AM IST (Updated: 10 Sept 2025 2:16 AM IST)
t-max-icont-min-icon

தமிழகம் உள்ளிட்ட நாடு முழுவதும் வாக்கு திருட்டு நடைபெறுகிறது. என்று பிரேமலதா விஜயகாந்த் கூறினார்.

தஞ்சாவூர்,

தே.மு.தி.க. பொதுச் செயலாளர் பிரேமலதா தஞ்சையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கடலூரில் ஜனவரி 9-ந் தேதி நடைபெறும் மாநாட்டில் கூட்டணி குறித்து மிகத்தெளிவான அறிவிப்பு வரும். அதுவரை யாருடைய ஊகங்களுக்கும், கேள்விகளுக்கும் இது தான் பதில். ஒரு பக்கம் கூட்டணி வலுவாக இருப்பதாகவும், இன்னொரு பக்கம் வலுவில்லை என சிலர் கூறினாலும், அது போன்ற நிலைமை கிடையாது. தேர்தலுக்கு இன்னும் 7, 8 மாதங்கள் உள்ள நிலையில், அதற்குள் அரசியலில் எது வேண்டுமானாலும் நடக்கலாம். பிரிந்தவர்கள் கூடுவதும், கூடியவர்கள் பிரிவதும் நிகழலாம்.

தமிழகத்தில் இதுபோல எத்தனை ஆண்டுகள் பார்த்து வருகிறோம். அரசியலில் நிரந்தர எதிரியும் இல்லை, நிரந்தர நண்பனும் இல்லை. ஜனவரி மாதத்துக்கு முன்பாக அனைத்து கட்சிகளும் தெளிவான முடிவை எடுக்கும்.

வாக்கு திருட்டு பீகாரில் மட்டும் நடை பெறவில்லை. தமிழகம் உள்ளிட்ட நாடு முழுவதும் வாக்கு திருட்டு நடைபெறுகிறது. எனவே, இந்த முறைகேட்டை தடுக்க வேண்டிய கடமை தேர்தல் ஆணையத்திற்கு இருக்கிறது. இதற்கு நீதிபதிகள் துணையாக இருக்க வேண்டும். ஜனநாயக ரீதியாக நடைபெறும் தேர்தல் நியாயமானதாக, மக்களுக்கான உண்மையான தேர்தலாக இருப்பது அவசியம். வரும் தேர்தலாவது நியாயமான தேர்தலாக நடைபெற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்

1 More update

Next Story