திருச்செந்தூர் கோவில் மகா கும்பாபிஷேகம் நிறைவு... கண்கவர் புகைப்படங்கள்..!

16 ஆண்டுகளுக்கு பிறகு திருச்செந்தூர் கோவில் மகா கும்பாபிஷேகம் இன்று கோலாகலமாக நடைபெற்றது.
திருச்செந்தூர்,
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடாக திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் திகழ்கிறது. இந்த கோவிலில் கடந்த 2.7.2009 அன்று மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதன் பின்னர் சுமார் 16 ஆண்டுகளுக்கு பிறகு இன்று மகா கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது.
இந்த கும்பாபிஷேகத்தில் அமைச்சர்கள் சேகர்பாபு, அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர். இதேபோன்று திருவாவடுதுறை ஆதீனம், தருமபுரம் ஆதீனம் ஆகியோரும் கலந்து கொண்டனர். கும்பாபிஷேக விழாவை காண்பதற்காக லட்சக்கணக்கான பக்தர்கள் திருச்செந்தூரில் குவிந்தனர். இதனால் கோவில் விடுதிகள், தனியார் விடுதிகள் மற்றும் நகர் பகுதியில் உள்ள தனியார் விடுதிகள் அனைத்தும் நிரம்பின. திருச்செந்தூர் நகரமே விழாக்கோலம் பூண்டிருந்தது. எங்கு பார்த்தாலும் பக்தர்கள் தலைகளாகவே காட்சி அளித்தன.
திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோவில் மகா கும்பாபிஷேகம் தொடர்பான கண்கவர் புகைப்படங்களின் தொகுப்பு உங்களுக்காக...






