திருப்பரங்குன்றம் விவகாரம்: தமிழக அரசை கண்டித்து நாளை இந்து முன்னணி ஆர்ப்பாட்டம்


திருப்பரங்குன்றம் விவகாரம்:  தமிழக அரசை கண்டித்து நாளை இந்து முன்னணி ஆர்ப்பாட்டம்
x

தமிழகம் முழுவதும் மாலை 4 மணிக்கு ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகிறது.

சென்னை,

இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் திருப்பூரில் நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது,

திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தீபத்தூணில் தீபம்ஏற்றுவது தொடர்பாக கடந்த 2 நாட்களாக தமிழக அரசு, மக்களின் பக்தியை அவமதித்துவருவதை வன்மையாக கண்டிக்கிறோம்.

மதுரை ஐகோர்ட்டு நீதிபதி 2 முறை உத்தரவிட்டும் போலீஸ் துறை மூலம் தடுத்து நிறுத்தினார்கள். இதில், மேல்முறையீடு என்று தமிழக அரசு இரட்டை வேடம் போடுகிறது. மதசார்பற்ற அரசாக இருந்தால், தீபம் ஏற்ற அனுமதி வழங்கியிருக்க வேண்டும். ஆனால் தி.மு.க. அரசு இந்து விரோத போக்கை கடைபிடித்து வருகிறது.

திருப்பரங்குன்றம் மலையில் ஐகோர்ட்டு உத்தரவுப்படி தீபத்தூணில் தீபம் ஏற்ற அனுமதிக்க வேண்டும் என்று வலியுறுத்தியும், முருக பக்தர்களின் மனதை புண்படுத்தும் தமிழக அரசை கண்டித்தும் 7-ந்தேதி (நாளை) தமிழகம் முழுவதும் மாலை 4 மணிக்கு ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

1 More update

Next Story