திருவாரூர்: கிழக்கு கடற்கரை சாலையை ஆக்கிரமித்த கருவேலமரங்கள் அகற்றம்

இது குறித்த செய்தி 'தினத்தந்தி' நாளிதழில் வெளியானது.
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை பகுதி வழியாக கிழக்கு கடற்கரை சாலை செல்கிறது. சென்னையில் இருந்து மதுரை, நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட ஊர்களுக்கும், தென் மாவட்டங்களில் இருந்து நாகை, காரைக்கால், புதுச் சேரி, சென்னை உள்ளிட்ட ஊர்களுக்கு செல்வதற்கும் கிழக்கு கடற்கரை சாலையை மக்கள் பயன்படுத்தி வருகிறார்கள்.
இந்த சாலையில் முத்துப்பேட்டையில் இருந்து திருத்துறைப்பூண்டி வரை உள்ள பகுதியை கருவேல மரங்கள் ஆக்கிரமித்து, புதர்காடு போல காட்சி அளித்தது. முத்துப் பேட்டை மங்களூர் ஏரி அருகே கிழக்கு கடற்கரை சாலை யின் இரு புறங்களிலும் மண்டி இருந்த கருவேல மரங்களால் எதிரே வரும் வாகனங்கள் கூட தெரியாத நிலையில் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டனர்.
எனவே போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த கருவேல மரங்களை முற்றிலுமாக வெட்டி அகற்றவேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்தனர். இது குறித்த செய்தி 'தினத்தந்தி' நாளிதழில் வெளியானது. இதைத்தொடர்ந்து கருவேல மரங்களை அகற் றும் பணி நடைபெற்று வருகிறது. கருவேல மரங்களை வெட்டி அகற்ற நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் இது குறித்து செய்தி வெளியிட்ட 'தினத்தந்தி' நாளிதழுக்கும் அப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர்.






