தூத்துக்குடி: பெட்ரோல் போட்ட அடுத்த நொடி மளமளவென பற்றி எரிந்த பைக்


தூத்துக்குடி: பெட்ரோல் போட்ட அடுத்த நொடி மளமளவென பற்றி எரிந்த பைக்
x
தினத்தந்தி 19 March 2025 4:52 PM IST (Updated: 19 March 2025 5:33 PM IST)
t-max-icont-min-icon

பெட்ரோல் பங்க்கில் திடீரென பைக் தீப்பிடித்து எரிந்ததால் அங்கு பரபரப்பான சூழல் நிலவியது.

தூத்துக்குடி

தூத்துக்குடியில் உள்ள பெட்ரோல் பங்க் ஒன்றில் உத்தர பிரதேச மாநிலத்தை சேர்ந்த முகமது சவேரியார் தனது பைக்கிற்கு பெட்ரோல் போட வந்தார். பெட்ரோல் போட்ட பின்னர் வாகனத்தை இயக்க முயற்சித்தார். அப்போது பைக்கானது திடீரென மளமள வென தீ பற்றி எரியத்தொடங்கியது.

அங்கு பெட்ரோல் போட வந்தவர்கள் இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடனே சுதாரித்துக்கொண்ட பெட்ரோல் பங்க் ஊழியர்களின் தீயை அணைத்ததால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது.

1 More update

Next Story