தூத்துக்குடி: நடுக்கடலில் மீனவர் திடீர் சாவு

தூத்துக்குடி வெள்ளப்பட்டியைச் சேர்ந்த ஒரு மீனவர் நாட்டுப்படகில் 9 மீனவர்களுடன் கடலுக்குள் மீன்பிடிக்க சென்றுள்ளார்.
தூத்துக்குடி: நடுக்கடலில் மீனவர் திடீர் சாவு
Published on

தூத்துக்குடி தாளமுத்துநகர், வெள்ளப்பட்டியை சேர்ந்த செல்வ டேவிட்ராஜன் மகன் அஸ்வின் (வயது 21). இவர் அதே பகுதியை சேர்ந்த ஆரோக்கியம் என்பவரின் நாட்டுப்படகில் 9 மீனவர்களுடன் மீன்பிடிக்க சென்றுள்ளார். கடந்த 15ம் தேதி தூத்துக்குடியில் இருந்து சுமார் 110 கடல்மைல் தொலைவில் மீன்பிடித்துக் கொண்டு இருந்த போது அஸ்வின் திடீரென மயங்கி விழுந்து விட்டாராம்.

உடனடியாக அவரை கரைக்கு கொண்டு வந்தனர். கடந்த 16ம் தேதி காலையில் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது, அவர் வழியிலயே இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்து உள்ளனர். இதுகுறித்த புகாரின் பேரில் தருவைகுளம் கடலோர பாதுகாப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

X

Daily Thanthi
www.dailythanthi.com