மழையால் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் பயிர்ச்சேதம்: விவசாயிகளுக்கு உடனடியாக இழப்பீடு வழங்க வேண்டும் - எஸ்டிபிஐ கட்சி


மழையால் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் பயிர்ச்சேதம்: விவசாயிகளுக்கு உடனடியாக இழப்பீடு வழங்க வேண்டும் - எஸ்டிபிஐ கட்சி
x

கனமழையால், பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கி முற்றிலும் சேதமடைந்துள்ளன.

சென்னை,

எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;

தமிழகம் முழுவதும் பல மாவட்டங்களில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால், பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கி முற்றிலும் சேதமடைந்துள்ளன. குறிப்பாக, குறுவை மற்றும் சம்பா பயிர்கள் சாகுபடி செய்த டெல்டா மாவட்ட விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த இயற்கைப் பேரிடர், விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பெருமளவு பாதித்து, அவர்களை கடுமையான பொருளாதார நெருக்கடிக்கு உள்ளாக்கியுள்ளது.

விவசாயிகளின் உழைப்பையும் வாழ்வாதாரத்தையும் பாதுகாக்க வேண்டிய கடமை அரசுக்கு உள்ளது. எனவே, பாதிக்கப்பட்ட விவசாயிகளின் நிலங்களை உடனடியாக ஆய்வு செய்து, சேதமடைந்த பயிர்களுக்கு நியாயமான மற்றும் தகுந்த இழப்பீடு வழங்க ஒன்றிய மற்றும் மாநில அரசுகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என எஸ்டிபிஐ கட்சி சார்பில் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறோம்.

விவசாயிகளின் கண்ணீரையும், அவர்களின் உழைப்பின் இழப்பையும் புறக்கணிக்காமல், அவர்களுக்கு உரிய நீதியை வழங்குவது அரசின் பொறுப்பாகும். இவ்விவகாரத்தில் எவ்வித தாமதமும் இன்றி, விரைவான நடவடிக்கைகளை எடுக்குமாறு தமிழக அரசை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

1 More update

Next Story