திருவண்ணாமலை: செண்பகத்தோப்பு அணையில் இருந்து தண்ணீர் திறப்பு - கரையோர மக்களுக்கு எச்சரிக்கை


திருவண்ணாமலை: செண்பகத்தோப்பு அணையில் இருந்து தண்ணீர் திறப்பு - கரையோர மக்களுக்கு எச்சரிக்கை
x

ஜவ்வாது மலைப்பகுதில் கனமழை கொட்டித்தீர்த்தது

திருவண்ணாமலை

திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலம் அருகே படவேடு பகுதியில் செண்பகத்தோப்பு அணை உள்ளது. இதனிடையே, திருவண்ணாமலையில் நேற்று இரவு கனமழை பெய்தது. குறிப்பாக, ஜவ்வாது மலைப்பகுதில் கனமழை கொட்டித்தீர்த்தது. இதன் காரணமாக செண்பகத்தோப்பு அணைக்கு வரும் தண்ணீர் அளவு அதிகரித்தது.

இந்நிலையில், செண்பகத்தோப்பு அணையில் இருந்து நேற்று இரவு தண்ணீர் திறக்கப்பட்டது. அணையில் இருந்து விநாடிக்கு 900 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால் கரையோர மக்கள் எச்சரிக்கையாக இருக்க நீர்வளத்துறை அறிவுறுத்தியுள்ளது.

1 More update

Next Story