இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்... 24-10-2025

உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Live Updates
- 24 Oct 2025 9:20 AM IST
5 நாட்களுக்கு பிறகு ஊட்டி மலை ரெயில் சேவை இன்று மீண்டும் தொடங்கியது
கனமழையால் 5 நாட்களாக ரத்து செய்யப்பட்டிருந்த ஊட்டி மலை ரெயில் சேவை இன்று மீண்டும் தொடங்கியுள்ளது. மேட்டுப்பாளையம் ரெயில் நிலையத்தில் இருந்து ஊட்டிக்கு மலை ரெயில் புறப்பட்டது. இயற்கையின் அழகினை ரசித்தபடி சுற்றுலா பயணிகள் ரெயிலில் பயணித்தனர். குறைந்த வேகத்தில் ரெயில்கள் இயக்கப்படுகின்றன. 5 நாட்களுக்கு பிறகு மலை ரெயில் சேவை தொடங்கியதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
- 24 Oct 2025 9:18 AM IST
சென்னை உட்பட 8 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் 8 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன்படி தென்காசி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை மற்றும் திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.








