இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்... 05-03-2025


இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்... 05-03-2025
x
தினத்தந்தி 5 March 2025 9:22 AM IST (Updated: 5 March 2025 8:36 PM IST)
t-max-icont-min-icon

உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.


Live Updates

  • 5 March 2025 11:49 AM IST

    தொகுதி மறுசீரமைப்பு விவகாரம் தொடர்பான அனைத்துக் கட்சி கூட்டத்தில் 58 கட்சிகள் பங்கேற்றுள்ளது. 63 கட்சிகளுக்கு, அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில் 58 கட்சிகள் பங்கேற்றுள்ளது.

  • 5 March 2025 11:48 AM IST

     கோவை: பாரதியார் பல்கலை.வளாகத்தில் புகுந்த சிறுத்தையால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மாணவர்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு வெளியேற்றப்பட்டனர்.கோவை சரக வனத்துறையினர் சிறுத்தையின் கால் தடத்தை உறுதிப்படுத்திய நிலையில், சிறுத்தையை கண்டறிய கேமரா பொருத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

  • 5 March 2025 11:19 AM IST

    ஈரோடு மாவட்டம் கோபி செட்டிபாளையத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தலைமையில் நடைபெற்ற அதிமுகவின் செயல் வீரர்கள் கூட்டத்தில் இருதரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.

  • 5 March 2025 10:42 AM IST

    திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. 15 நாட்கள் கொண்டாடப்படும் விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக தேரோட்டம் வரும் 19-ம் தேதி நடைபெறுகிறது.

  • 5 March 2025 10:00 AM IST

    மும்மொழிக் கொள்கைக்கு ஆதரவு திரட்டும் வகையில் சம கல்வி இணையதளம் மூலம் இன்று துவக்கி வைக்கிறார் அண்ணாமலை.

  • 5 March 2025 9:59 AM IST

    தங்கம் விலை சவரனுக்கு ரூ.440 உயர்ந்து ரூ.64,520க்கும், கிராமுக்கு ரூ.55 உயர்ந்து ரூ.8,065க்கு விற்பனை ஆகிறது.  

  • 5 March 2025 9:56 AM IST

    ஜப்பானின் ஒபுனாடோவில் கடந்த வாரம் தொடங்கிய காட்டுத்தீ, அருகில் உள்ள நகரங்களுக்கும் பரவத் தொடங்கியதால், 100 வீடுகள் தீக்கிரையாகி உள்ளன. 5,000 ஏக்கர் வனப்பகுதி முற்றிலும் எரிந்து சேதமாகி உள்ளது. 1,200க்கும் மேற்பட்ட மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 2,000க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

  • 5 March 2025 9:50 AM IST

    அமெரிக்க நாடாளுமன்றத்தில் டிரம்ப் உரையின் போது எதிர்க்கருத்து தெரிவித்த ஜனநாயகக் கட்சி எம்.பி. வெளியேற்றம் செய்யப்பட்டார்.

  • 5 March 2025 9:24 AM IST

    தொகுதி மறுசீரமைப்பு என்பது தமிழ்நாட்டிற்கான பெரும் தண்டனையே அன்றி வேறு இல்லை என்று தவெக தலைவர் விஜய் கூறியுள்ளார்.

  • 5 March 2025 9:24 AM IST

    ஈரோடு மாவட்டம் பவானி அருகே, வேலைக்கு சென்ற இடத்தில், 17 வயது இளம்பெண் கர்ப்பம் அடைந்துள்ளார். இது தொடர்பாக 53 வயது பட்டறை உரிமையாளரை போக்சோவில் கைது செய்தது காவல்துறை.

1 More update

Next Story