இன்றைய முக்கியச் செய்திகள்.. சில வரிகளில்.. 09-09-2025

உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Live Updates
- 9 Sept 2025 8:53 AM IST
தி.மு.க. முப்பெரும் விழா: மாவட்ட செயலாளர்களுடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை
தி.மு.க. சார்பில் கட்சி தோற்றுவிக்கப்பட்ட தினம், அண்ணா மற்றும் பெரியார் பிறந்தநாள் ஆகியவை முப்பெரும் விழாவாக வருகிற 17-ந்தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி அன்றைய தினம் கரூரில் தி.மு.க. முப்பெரும் விழா பொதுக்கூட்டம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறுகிறது.
- 9 Sept 2025 8:52 AM IST
புதிய துணை ஜனாதிபதி யார்.. இன்று தேர்தல் - முடிவு எப்போது தெரியும்?
துணை ஜனாதிபதி தேர்தல் இன்று பாராளுமன்ற வளாகத்தில் அறை எண் எப்-101 என்ற அரங்கில் நடைபெறும். காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை ஓட்டுப்பதிவு நடைபெற உள்ளது. துணை ஜனாதிபதி தேர்தலை நடத்தும் அதிகாரியாக மேல்சபை செயலாளர் பி. சி. மோடி நியமிக்கப்பட்டுள்ளார். அவர் ஓட்டுப்பதிவை கண்காணிப்பார்.
ஓட்டு போடுவதற்காக அனைத்து கட்சிகளின் எம்.பி.க்களும் டெல்லிக்கு சென்று வருகின்றனர். இன்று மாலை 5 மணிக்கு ஓட்டுப்பதிவு முடிந்ததும் உடனடியாக ஓட்டுகள் எண்ணப்பட்டு முடிவுகள் வெளியிடப்படும்.
- 9 Sept 2025 8:51 AM IST
ரிஷபம்
பெண்களுக்கு எதிர்பாராத நல்ல விஷயங்கள் நடக்கக்கூடிய நாள். திருமணத்திற்கு தேவையான ஆடை, ஆபரணங்களை வாங்குவீர்கள். வாஷேர் மூலம் பணம் வரும். அரசியல்வாதிகளுக்கு தங்கள் கட்சியில் பெரிய பொறுப்புகளும் பதவியும் கிடைக்கும். உத்யோகத்தில் வரவேண்டிய பாக்கித் தொகை வந்து சேரும். பெண்களின் திருமண கனவு நிறைவேறும்.
அதிர்ஷ்ட நிறம்: சாம்பல்









