இன்றைய முக்கியச் செய்திகள்.. சில வரிகளில்.. 13-09-2025
உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Live Updates
- 13 Sept 2025 9:08 AM IST
டேவிஸ் கோப்பை டென்னிஸ்: தமிழக வீரர் தக்ஷினேஸ்வர் அசத்தல்
சென்னையை சேர்ந்த தஷினேஸ்வர் 7-6 (7-4), 6-3 என்ற நேர்செட்டில் ஜெரோம் கிம்முக்கு அதிர்ச்சி அளித்தார். 25 வயதான தக்ஷினேஸ்வர் இந்திய அணிக்காக அறிமுகமான முதல் போட்டியிலேயே அசத்தி கவனத்தை ஈர்த்துள்ளார்.
- 13 Sept 2025 9:06 AM IST
மகளிர் ஆசிய கோப்பை ஆக்கி: இறுதிப்போட்டிக்கு முன்னேறுமா இந்தியா?
சூப்பர்4 சுற்றில் இன்று (சனிக்கிழமை) கடைசி கட்ட லீக் ஆட்டங்கள் நடக்கின்றன. இதில் ஒரு ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் இந்திய அணி, நடப்பு சாம்பியன் ஜப்பானை (பிற்பகல் 2.15 மணி) எதிர்கொள்கிறது.
- 13 Sept 2025 9:04 AM IST
ஆட்சி கவிழ்ப்பு சதி; பிரேசில் முன்னாள் அதிபருக்கு 27 ஆண்டுகள் சிறை
பிரேசிலில் 2019 முதல் 2022-ம் ஆண்டு வரை அதிபராக இருந்தவர் ஜெயிர் பொல்சனாரோ (வயது 70). லிபரல் கட்சியைச் சேர்ந்த இவர் 2022-ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் தோல்வியை தழுவினார். தேர்தலில் தொழிலாளர் கட்சி வெற்றி பெற்று லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா அதிபராக தேர்வு செய்யப்பட்டார். ஆனால் தேர்தலில் தான் தோல்வியுற்றதை பொல்சனாரோ ஒப்புக்கொள்ளவில்லை.
எனவே மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் மீது சந்தேகம் இருப்பதாக கூறி ஆட்சி கவிழ்ப்பு சதியில் ஈடுபட்டார். இதனால் அவரது ஆதரவாளர்கள் நாடு முழுவதும் வன்முறையில் ஈடுபட்டனர். ஆனால் ராணுவத்தின் முயற்சியால் அவரது சதித்திட்டம் முறியடிக்கப்பட்டது. இதனையடுத்து ஆட்சி கவிழ்ப்பு சதியில் ஈடுபட்டதாக போலீசார் அவரை கைது செய்தனர்.
- 13 Sept 2025 9:02 AM IST
கலவரத்துக்கு பின் முதல் முறையாக.. இன்று மணிப்பூர் செல்கிறார் பிரதமர் மோடி
பிரதமர் மோடி, இன்று (சனிக்கிழமை) மணிப்பூர் செல்கிறார். டெல்லியில் இருந்து விமானம் மூலம் புறப்படும் அவர் மணிப்பூர் தலைநகர் இம்பாலுக்கு செல்கிறார். அங்கிருந்து கார் மூலம் காங்லா கோட்டைக்கு செல்கிறார்.
- 13 Sept 2025 9:00 AM IST
இசைஞானி இளையராஜாவுக்கு தமிழக அரசு சார்பில் இன்று பாராட்டு விழா
தமிழ் திரை இசையை உலக அளவில் புகழ்பெறச் செய்த இசைஞானி இளையராஜா, திரை இசை உலகில் 50 ஆண்டுகளை கடந்ததையொட்டி, அவருக்கு தமிழக அரசு சார்பில் பாராட்டு விழா நடைபெறுகிறது.
- 13 Sept 2025 8:59 AM IST
விறுவிறுப்பாகும் அரசியல் களம்... விஜய்யின் பிரசார பயணம் திருச்சியில் இன்று தொடக்கம்
இந்த பிரசாரம் 2026-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் மிகப்பெரிய அரசியல் மாற்றத்துக்கு வழிவகுக்கும் என்று விஜய்யின் ரசிகர்கள், த.வெ.க. தொண்டர்கள் நம்புகிறார்கள். விஜய் பிரசாரம் செய்யப்போகும் மரக்கடை பகுதி பல்வேறு அரசியல் கட்சிகள் தங்கள் பொதுக்கூட்டங்களை நடத்திய இடம். கடந்த சில நாட்களுக்கு முன்பு திருச்சிக்கு வந்த அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் மரக்கடை எம்.ஜி.ஆர். சிலை அருகே தான் பிரசாரம் செய்தார்.
அந்தவகையில் திருச்சியில் தனது சுற்றுப்பயணத்தை நடிகர் விஜய் தொடங்க உள்ளார்.
- 13 Sept 2025 8:57 AM IST
பிரசார சுற்றுப் பயணம்.. சென்னையில் இருந்து திருச்சி புறப்பட்டார் விஜய்
தவெக தலைவர் விஜய் தனது பிரசார சுற்றுப் பயணத்தை இன்று (சனிக்கிழமை) திருச்சியில் இருந்து தொடங்குகிறார்.
காலை 10.35 மணியளவில் மரக்கடை, எம்ஜிஆர் சிலை அருகே நடைபெற உள்ள கூட்டத்தில் விஜய் பேசுகிறார். திருச்சி, அரியலூர் மற்றும் பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் பிரசாரம் நடைபெற உள்ளது.
இந்நிலையில் தற்போது சென்னையில் இருந்து தவெக தலைவர் விஜய் திருச்சி புறப்பட்டார்.
- 13 Sept 2025 8:52 AM IST
ராசிபலன்: எந்தெந்த ராசிகளுக்கு இன்று அதிர்ஷ்டம் தெரியுமா..?
கன்னி
சுய தொழில் செய்பவர்களுக்கு நல்ல லாபம் உண்டாகும். பெண்களுக்கு நல்ல வரண் கிட்டும். அரசியல்வாதிகள் மக்களிடம் பேராதரவை பெறுவர். வீட்டு பிராணிகளை வளர்க்க ஆர்வம் கொள்வீர். வரவேண்டிய பாக்கிகள் வந்து சேரும். உடல் நிலை மேம்படும்.
அதிர்ஷ்ட நிறம் - மஞ்சள்
















