இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 14-08-2025
உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Live Updates
- 14 Aug 2025 10:31 AM IST
டிஎன்பிஎஸ்சி குரூப் 4: மறுதேர்வு நடத்தக்கோரி சென்னையில் தேர்வர்கள் போராட்டம்
குரூப்-4 தேர்வை ரத்து செய்துவிட்டு, மறுதேர்வு நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தமிழ்நாடு அனைத்து நிலை போட்டித் தேர்வர்கள் சங்கம் சார்பில் சென்னை எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டு மைதானம் முன்பு நேற்று போராட்டம் நடந்தது. போராட்டத்தில் குரூப்-4 தேர்வு எழுதியவர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.
- 14 Aug 2025 10:29 AM IST
தூய்மைப் பணியாளர்களுக்கு எதிராக அடக்குமுறையை ஏவுவது கோழைத்தனம் - அன்புமணி ராமதாஸ் கண்டனம்
ஏழை, எளிய மக்களான தூய்மைப் பணியாளர்களை அடக்குமுறையை கட்டவிழ்த்து விட்டு அகற்றுவது வீரம் அல்ல... கோழைத்தனம். அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதுதான் வீரம் ஆகும். அதை செய்யாமல் அடக்குமுறையை ஏவி அவர்களை அகற்றிய தி.மு.க. அரசை தமிழ்நாட்டு மக்கள் அகற்றும் நாள் வெகுதொலைவில் இல்லை என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். - 14 Aug 2025 10:27 AM IST
தொடர் விடுமுறை: சென்னையில் விமான கட்டணங்கள் உயர்வு
தொடர் விடுமுறை காரணமாக சென்னையில் உள்நாட்டு விமான கட்டணங்கள் பலமடங்கு உயர்ந்துள்ளது. சென்னையில் இருந்து திருச்சிக்கு சாதாரண நாட்களில் ரூ.1,827ஆக இருந்த விமான கட்டணம் ரூ.14,518 மதுரை செல்லும் விமான ஆகவும், கோவைக்கு ரூ.3,818ல் இருந்து ரூ.15,546 ஆகவும் உயர்ந்துள்ளது. சென்னை கட்டணம் ரூ.4,000 ஆக இருந்த நிலையில் தற்போது ரூ.13,000 வரை உயர்ந்துள்ளது.
- 14 Aug 2025 10:25 AM IST
ஆன்லைன் சூதாட்ட செயலி விவகாரம்: நடிகை லட்சுமி மஞ்சுவிடம் அமலாக்கத்துறை விசாரணை
தமிழ் மற்றும் தெலுங்கு பட நடிகையான லட்சுமி மஞ்சு நேற்று ஐதராபாத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் நேரில் ஆஜரானார்.
அமலாக்கத்துறையின் மண்டல அலுவலகத்தில் ஆஜரான அவரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி அவரது வாக்குமூலத்தை பதிவு செய்து கொண்டனர். முன்னதாக இந்த வழக்கில் நடிகர்கள் பிரகாஷ் ராஜ், விஜய் தேவரகொண்டா, ராணா டகுபதி ஆகியோரிடமும் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தியது குறிப்பிடத்தக்கது.
- 14 Aug 2025 10:24 AM IST
திரையுலகில் 50 ஆண்டுகளை நிறைவு செய்த ரஜினிகாந்த் - முத்தரசன் வாழ்த்து
திரையுலகில் 50 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள நடிகர் ரஜினிகாந்துக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் முத்தரசன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
- 14 Aug 2025 10:22 AM IST
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று தமிழக அமைச்சரவை கூட்டம்
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெறவுள்ளது. சென்னை தலைமை செயலகத்தில் இன்று காலை 11 மணிக்கு நடைபெறும் அமைச்சரவை கூட்டத்தில் துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்பட அனைத்து அமைச்சர்களும் பங்கேற்கின்றனர்.
- 14 Aug 2025 10:20 AM IST
கும்பம்
இன்று உங்களின் முயற்சிகள் வெற்றியடையும். தொழிலில் புதிய வாய்ப்புகள் வரும். பணவரவு சீராக இருக்கும். புதிய நண்பர்கள் மற்றும் தொடர்புகள் உருவாகும். காதல் வாழ்க்கையில் இனிமை அதிகரிக்கும். குடும்பத்துடன் நல்லுறவு நிலைக்கும். ஆரோக்கியத்தை கவனிக்கவும்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை















