ஆசிய கோப்பை: ஹாங்காங் அணிக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற இலங்கை பந்துவீச்சு தேர்வு


ஆசிய கோப்பை: ஹாங்காங் அணிக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற இலங்கை பந்துவீச்சு தேர்வு
x

image courtesy: Sri Lanka Cricket twitter

துபாயில் நடைபெறும் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியனான இலங்கை அணி, ஹாங்காங் அணியுடன் மோதுகிறது.

துபாய்,

17-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி (20 ஓவர்) ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய் மற்றும் அபுதாபியில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ‘ஏ’ பிரிவில் நடப்பு சாம்பியன் இந்தியா, பாகிஸ்தான், ஓமன், ஐக்கிய அரபு அமீரக அணிகளும், ‘பி’ பிரிவில் இலங்கை, ஆப்கானிஸ்தான், வங்காளதேசம், ஹாங்காங் அணிகளும் இடம் பெற்றுள்ளன.

ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் இரு பிரிவிலும் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர்4 சுற்றுக்கு தகுதி பெறும். இந்த தொடரில் இன்று இரண்டு லீக் ஆட்டங்கள் நடக்கின்றன. இதில் மாலை 5.30 மணிக்கு தொடங்கி நடைபெற்று வரும் ஆட்டத்தில் ஐக்கிய அரபு அமீரகம் - ஓமன் அணிகள் மோதி வருகின்றன.

இதில் டாஸ் வென்ற ஓமன் அணி பந்துவீசுவதாக அறிவித்தது. இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த ஐக்கிய அரபு அமீரகம் அணி 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 172 ரன்கள் எடுத்துள்ளது. இதையடுத்து 173 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஓமன் அணி பேட்டிங் செய்து வருகிறது.

இந்த நிலையில் இரவு 8 மணிக்கு துபாயில் நடைபெறும் மற்றொரு ஆட்டத்தில் முன்னாள் சாம்பியனான இலங்கை அணி, ஹாங்காங் அணியுடன் மோதுகிறது. இந்த நிலையில் இந்த ஆட்டத்துக்கான டாஸ் சுண்டப்பட்டது. இதில் டாஸ் வென்ற அணி இலங்கை அணி பந்துவீசுவதாக அறிவித்தது. இதையடுத்து ஹாங்காங் அணி முதலில் பேட்டிங் செய்ய உள்ளது.

1 More update

Next Story