இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 16-01-2026

உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Live Updates
- 16 Jan 2026 10:38 AM IST
சிறப்பு ரெயிலுக்கான முன்பதிவு நாளை காலை 8 மணிக்கு தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- 16 Jan 2026 10:36 AM IST
மும்பை மாநகராட்சி தேர்தல்: 29 மாநகராட்சிகளையும் கைப்பற்ற போவது யார்? வாக்கு எண்ணிக்கை தொடங்கியது
மராட்டியத்தில் 29 மாநகராட்சிகளுக்கான வாக்குப்பதிவு அமைதியாக நடந்து முடிந்தது. சராசரியாக 50 சதவீத வாக்குகள் பதிவாகின. இன்று காலை 10 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.
- 16 Jan 2026 10:07 AM IST
பாலமேடு ஜல்லிக்கட்டு தொடங்கியது... சீறும் காளைகளை அடக்கும் காளையர்கள்
பொங்கல் பண்டிகையின்போது மதுரை மாவட்டம் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிகள் மிகவும் சிறப்பு வாய்ந்தவை. நேற்று அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்ற நிலையில் இன்று பாலமேட்டில் ஜல்லிக்கட்டு நடைபெற்று வருகிறது.
- 16 Jan 2026 10:04 AM IST
“திருக்குறளை நீங்கள் அனைவரும் படிக்க வேண்டும்” - பிரதமர் மோடி
தமிழ்க் கலாசாரத்தின் சிறந்த அம்சங்களுக்கு திருவள்ளுவர் எடுத்துக்காட்டாகத் திகழ்கிறார் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
- 16 Jan 2026 10:02 AM IST
ஜீவராசிகளுக்கு தரும் முக்கியத்துவத்தை உணர்த்தும் நாள் ‘மாட்டுப் பொங்கல்’ - எல். முருகன்
மாட்டுப் பொங்கலை முன்னிட்டு மத்திய இணை மந்திரி எல்.முருகன் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
- 16 Jan 2026 10:01 AM IST
திருவள்ளுவர் சிலைக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை
திருவள்ளுவர் தினத்தையொட்டி விருதுகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
- 16 Jan 2026 9:59 AM IST
திருச்சி: பெரிய சூரியூரில் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது
நிரந்தர ஜல்லிக்கட்டு மைதானத்தில் முதல் முறையாக ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்று வருகிறது.
- 16 Jan 2026 9:57 AM IST
சபரிமலையில் தங்கம் மோசடி வழக்கு: முன்னாள் தேவஸ்தான உறுப்பினர் சங்கரதாஸ் கைது
சபரிமலையில் தங்கம் மோசடி வழக்கில் முன்னாள் தேவஸ்தான உறுப்பினர் சங்கரதாஸ் கைது செய்யப்பட்டுள்ளார்.
- 16 Jan 2026 9:55 AM IST
அனைவருக்கும் நலமும், வளமும் பெருக வேண்டுகிறேன் - அண்ணாமலை வாழ்த்து
மாட்டுப் பொங்கலை முன்னிட்டு மக்களுக்கு அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், மாட்டுப் பொங்கலையொட்டி, மக்களுக்கு முன்னாள் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வாழ்த்து தெரிவித்துள்ளார்.
- 16 Jan 2026 9:45 AM IST
சற்று குறைந்த தங்கம், வெள்ளி விலை.. இன்றைய விலை நிலவரம் என்ன..?
இன்று தங்கம் விலை சற்று சரிந்துள்ளது. அதன்படி சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.480 குறைந்து, ஒரு சவரன் ரூ.1,05,840-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.60 குறைந்து ஒரு கிராம் ரூ.13,230-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
















