இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 17-01-2026
உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Live Updates
- 17 Jan 2026 10:54 AM IST
புரட்சித் தலைவர் எம்ஜிஆரின் பிறந்த நாளான இன்று அவர் புகழைப் போற்றுவோம் - ஆதவ் அர்ஜுனா புகழஞ்சலி
சத்துணவுத் திட்டத்தை விரிவுபடுத்தி, ஏழை மாணவர்களின் பசியைப் போக்கி புரட்சி கண்டவர் எம்ஜிஆர் என ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார்.
- 17 Jan 2026 10:41 AM IST
முதல் இந்திய வீரர்...இன்னும் 26 ரன்கள் - ஷ்ரேயாஸ் ஐயர் நிகழ்த்த இருக்கும் சாதனை
ஷ்ரேயாஸ் ஐயர் இந்திய அணிக்காக ஒருநாள் போட்டிகளில் 2,974 ரன்களை குவித்துள்ளார்.
- 17 Jan 2026 10:34 AM IST
தொடர் விடுமுறை.. திருப்பதியில் இலவச தரிசனத்துக்கு 24 மணி நேரம் காத்திருக்கும் பக்தர்கள்
திருப்பதியில் கடும் பனிப்பொழிவு நிலவுவதால் பக்தர்கள் குளிரில் நடுங்கியபடி பல மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர்.திருப்பதியில் நேற்று 78,733 பக்தர்கள் தரிசனம் செய்தனர். 31,146 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.3.41 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது. நேரடி இலவச தரிசனத்தில் வந்த பக்தர்கள் 24 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர்.
- 17 Jan 2026 10:11 AM IST
ரங்காபானி-நாகர்கோவில் இடையே இன்று முதல் வந்தே பாரத் ரெயில்
மேற்குவங்க மாநிலம் ரங்காபானி-நாகர்கோவில் இடையே வந்தே பாரத் ரெயில் இன்று முதல் இயக்கப்படுகிறது.
- 17 Jan 2026 10:08 AM IST
‘புரட்சித் தலைவர்’ என்று அனைவராலும் அன்போடு அழைக்கப்பட்டவர் எம்ஜிஆர்.. - எல்.முருகன் புகழஞ்சலி
சமூகச் சேவையிலும், மக்களிடையே அன்பு செலுத்துவதிலும் அவர் விட்டுச் சென்ற நினைவுகளை மறவாது போற்றுவோம் என எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
- 17 Jan 2026 9:57 AM IST
போலந்து துணை பிரதமர் இன்று இந்தியா வருகை
இந்தியாவுக்கு இன்று வரும் போலந்து துணை பிரதமர் வருகிற 19-ந்தேதி மத்திய வெளிவிவகார மந்திரி ஜெய்சங்கரை சந்தித்து பேசுவார்.
- 17 Jan 2026 9:56 AM IST
பா.ஜ.க.வின் அடுத்த தேசிய தலைவர் யார்..? 20-ந் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகிறது
பா.ஜ.க. தேசிய தலைவராக முக்கிய புள்ளியான இவர், 20-ந் தேதி போட்டியின்றி தேர்வு செய்யப்படுவார் என்று தெரிகிறது.
- 17 Jan 2026 9:56 AM IST
டெல்லியில் குளிர் அலை பரவல்; விமான சேவை பாதிப்பு
பயணிகள் அந்தந்த விமான நிறுவனங்களுடன் தொடர்பு கொண்டு நிலைமையை பற்றி கேட்டறிந்து கொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
- 17 Jan 2026 9:54 AM IST
ஜனநாயகத்தின் மீதான நம்பிக்கை சரிந்து விட்டது - ராகுல்காந்தி
மராட்டிய உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவின்போது அழியாத மையின் தரம் குறித்து சர்ச்சை எழுந்தது.
- 17 Jan 2026 9:53 AM IST
வெனிசுலாவிடம் இருந்து ரூ.47 ஆயிரம் கோடி மதிப்பிலான எண்ணெய் கிடைக்கும் - டிரம்ப்
வெனிசுலாவிடம் இருந்து 5 கோடி எண்ணெய் பீப்பாய்கள் அமெரிக்காவுக்கு வந்து கொண்டிருக்கின்றன என டிரம்ப் கூறினார்.

















