இன்றைய முக்கியச் செய்திகள்.. சில வரிகளில்.. 18-09-2025
உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Live Updates
- 18 Sept 2025 10:04 AM IST
லோகேஷ் கனகராஜ் அழைத்தால், தயங்காமல் அந்த கேரக்டரில் நடிப்பேன்- அர்ஜுன் தாஸ்
ஹீரோவோ, வில்லனோ எதுவாக இருந்தாலும் இயக்குனர்கள் சொல்வதைக் கேட்டு நடிப்பவன் நான் என்று அர்ஜுன் தாஸ் கூறியுள்ளார்.
- 18 Sept 2025 10:03 AM IST
’தனி ஒருவன் 2' எப்போது தொடங்கும்?- இயக்குனர் கொடுத்த அப்டேட்!
விருது விழா ஒன்றில் கலந்து கொண்ட இயக்குனர் மோகன் ராஜா 'தனி ஒருவன் 2' படம் குறித்து அப்டேட் கொடுத்துள்ளார்.
- 18 Sept 2025 10:01 AM IST
'இட்லி கடை' படத்தின் டிரெய்லர் எப்போது?.. படக்குழு வெளியிட்ட அறிவிப்பு
தனுஷ் இயக்கி, நடித்துள்ள இட்லி கடை திரைப்படம் வருகிற அக்டோபர் 1ந் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
- 18 Sept 2025 9:53 AM IST
‘பெண்களை எள்ளி நகையாடாதீர்கள்' - ‘பேட் கேர்ள்' பட நடிகை ஆதங்கம்
கடும் சர்ச்சைகளுக்கு இடையே சமீபத்தில் திரைக்கு வந்து கவனம் ஈர்த்த 'பேட் கேர்ள்' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து கவனம் ஈர்த்தவர், சரண்யா ரவிச்சந்திரன். 'டீசல்'. 'லாயர்' என படங்கள் கைவசம் வைத்திருக்கும் அவர், சமூகத்தில் பெண்களுக்கு அநீதி நடந்து வருவதாக கூறியுள்ளார்.
- 18 Sept 2025 9:51 AM IST
கூடிக் கலையும் கூட்டமல்ல இது திமுகவின் கொள்கைக் கூட்டம் - உதயநிதி ஸ்டாலின் பதிவு
கொட்டும் மழையிலும், திமுக முப்பெரும் விழா பிரமாண்டமாக நடைபெற்று முடிந்துள்ளது என்று துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
- 18 Sept 2025 9:49 AM IST
காலிலேயே விழுந்த பின்னர் கர்ச்சீப் எதற்கு? - எடப்பாடி பழனிசாமியை கடுமையாக விமர்சித்த மு.க.ஸ்டாலின்
மாற்றம் என்று சொன்ன அனைவரும் மாறினார்கள், மறைந்து போனார்கள். ஆனால் திமுக மட்டும் மாறவில்லை என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
- 18 Sept 2025 9:48 AM IST
மேலும் சரிந்த தங்கம் விலை.. இன்றைய நிலவரம் என்ன..?
இன்று தங்கம் விலை சரிவை சந்தித்துள்ளது. இதன்படி சென்னையில் ஆபரணத்தங்கம் விலை சவரன் ரூ.400 குறைந்து ஒரு சவரன் ரூ,81,760க்கு விற்பனையாகிறது. ஆபரணத்தங்கத்தின் விலை கிராம் ரூ.50 குறைந்து, ஒரு கிராம் ரூ.10,220க்கு விற்பனை செய்யப்படுகிறது
- 18 Sept 2025 9:20 AM IST
போதைப்பொருள் நாடுகளின் பட்டியலில் இந்தியாவா? - டிரம்ப் வெளியிட்ட அறிவிப்பால் பரபரப்பு
சட்ட விரோதமாக போதைப்பொருள் தயாரித்தல் மற்றும் கடத்தலில் ஈடுபடும் நாடுகள் பட்டியலை அமெரிக்க நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி டிரம்ப் வெளியிட்டார். 23 நாடுகளை கொண்ட அந்த பட்டியலில் ஆப்கானிஸ்தான், சீனா, பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளுடன் இந்தியாவின் பெயரையும் அவர் சேர்த்து இருந்தார்.
- 18 Sept 2025 9:19 AM IST
அதிகரிக்கும் பதற்றம்.. காசா நகருக்குள் முன்னேறும் இஸ்ரேல் படை
கடந்த இரு தினங்களாக காசா மீது தரைவழி தாக்குதலையும் இஸ்ரேல் தீவிரப்படுத்தி உள்ளது. இதனால் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில் அங்குள்ள பொதுமக்கள் ஆயிரக்கணக்கில் வெளியேறி வருகிறார்கள். வாகனங்களிலும், கால்நடையாகவும் மக்கள் வெளியேறிக் கொண்டிருக்கும் நிலையில், இஸ்ரேலின் படை துருப்புகள், காசாவுக்குள் தீவிரமாக ஊடுருவி முன்னேறிச் செல்லத் தொடங்கி உள்ளன.
- 18 Sept 2025 9:18 AM IST
கடந்த 2012-ம் ஆண்டு தொடங்கி கடந்த ஆண்டு வரை (2024), 12 ஆண்டுகளில் அமேசான் காடுகள் அழிப்புக்கு எதிராக போராடிய சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் 2,253 பேர் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டதாக தெரிவித்துள்ளது.
அதிகபட்சமாக பிரேசிலில் 365 பேர். கொலம்பியாவில் 250 பேர், பெருவில் 225 பேர் கொல்லப்பட்டுள்ளனர். கடந்த ஆண்டில் (2024) மட்டும் 124 பேர் இறந்துள்ளதாகவும். ஆண்டுதோறும் இந்த பலி எண்ணிக்கை உயர்ந்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


















