இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 19-08-2025


இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 19-08-2025
x
தினத்தந்தி 19 Aug 2025 9:19 AM IST (Updated: 20 Aug 2025 10:06 AM IST)
t-max-icont-min-icon

உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.


Live Updates

  • 19 Aug 2025 11:48 AM IST

    அதிமுக கூட்டத்திற்குள் சென்ற ஆம்புலன்ஸ்... டென்ஷன் ஆன எடப்பாடி பழனிசாமி - என்ன நடந்தது.?


    அதிமுக பொதுச்செயலாளரும், சட்டசபை எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி 'மக்களைக் காப்போம்: தமிழகத்தை மீட்போம்' என்ற பெயரில் சட்டமன்றத் தொகுதி வாரியாக, சூறாவளி பிரச்சார சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அதன்படி, 33வது நாளாக நேற்று (18-08-2025) வேலூர் மாவட்டம் அணைக்கட்டு சட்டமன்ற தொகுதிக்கு சென்றார்.

    அப்போது நோயாளி இன்றி வேண்டும் என்றே ஆம்புலன்சை கூட்டத்திற்கு நடுவே இயக்கியதாக குற்றம் சாட்டப்பட்டது.



  • 19 Aug 2025 11:42 AM IST

    தீபாவளிக்கு திரைக்கு வரும் ராஷ்மிகாவின் ''தாமா''...டீசர் வெளியானது

    இதுவரை ஹாரர் படத்தில் நடிக்காத நடிகை ராஷ்மிகா மந்தனா தற்போது அதன் பக்கம் திரும்பி இருக்கிறார். அதன்படி, அவர் நடிக்கும் முதல் ஹாரர் படத்தை ஸ்ட்ரீ, முஞ்யா உள்ளிட்ட ஹாரர் படங்களை தயாரித்த மேட்காப் நிறுவனம் தயாரிக்கிறது.

  • 19 Aug 2025 11:34 AM IST

    தி.மு.க. பொருளாளர் டி.ஆர்.பாலுவின் மனைவி காலமானார்

    தி.மு.க. பொருளாளர் டி.ஆர்.பாலுவின் மனைவி ரேணுகாதேவி (79) உடல்நலக்குறைவால் காலை காலமானார்.

  • 19 Aug 2025 11:30 AM IST

    மதுரை: தூய்மைப் பணியாளர்களின் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைப்பு

    மதுரை மாநகராட்சி தற்காலிக தூய்மைப் பணியாளர்களின் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

    தொழிலாளர் நல ஆணையர் அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதால் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

  • 19 Aug 2025 11:26 AM IST

    யுபிஐ பயன்படுத்துறீங்களா? அக்.1க்கு பிறகு இந்த வசதி இருக்காது: வெளியான தகவல்


    இந்தியர்களின் ஆன்லைன் பரிவர்த்தனைகள் முக்கிய பங்காக மாறிவிட்டது. டீக்கடை முதல் ஷாப்பிங் மால் வரை டிஜிட்டல் முறையில் பணம் செலுத்துவதில் மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதற்காக ஜிபே, போன்பே, உள்ளிட்ட செயலிகளை பயன்படுத்தி யுபிஐ பரிவர்த்தனையை பயன்படுத்தி வருகிறார்கள்.

    வங்கி கணக்குடன் இணைக்கப்பட்டுள்ள யுபிஐ ஐடி மூலம் சில வினாடிகளில் பரிவர்த்தனை செய்ய முடியும். இந்த வகை பரிவர்த்தனை வேகமாகவும் இருப்பதால், பயனர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. யுபிஐ களில் நடைபெறும் மோசடிகளை தவிர்க்கும் விதமாகவும் பயனர்களின் வசதியை மேம்படுத்தும் விதமாகவும் அவ்வப்போது புதிய அப்டேட்களை இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் மேற்கொண்டு வருகிறது.


  • 19 Aug 2025 10:48 AM IST

    இந்த வார விசேஷங்கள்: 19-8-2025 முதல் 25-8-2025 வரை


    19-ந் தேதி (செவ்வாய்)

    * சர்வ ஏகாதசி.

    * பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் காலை வெள்ளி கேடயத்திலும், இரவு சிம்ம வாகனத்திலும் பவனி.

    * திருச்செந்தூர் முருகப்பெருமான் கோ ரத உற்சவம்.

    * திருவலஞ்சுழி சுவேத விநாயகர் விழா தொடக்கம்.

    * மிலட்டூர். தேவகோட்டை, திண்டுக்கல் தலங்களில் விநாயகர் பவனி.

    * மேல்நோக்கு நாள்.


  • 19 Aug 2025 10:48 AM IST

    ''துரந்தர்'' படம்...மருத்துவமனையில் 100 பேர் அனுமதி

    பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் தற்போது லடாக்கில் தனது 'துரந்தர்' படத்தின் படப்பிடிப்பில் ஈடுபட்டுள்ளார். லடாக்கின் லே மாவட்டத்தில் சில நாட்களாக படப்பிடிப்பு நடந்து வருகிறது. இதற்கிடையில், படக்குழுவைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

  • 19 Aug 2025 10:46 AM IST

    திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் இளையராஜா சாமி தரிசனம்


    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு இன்று காலை இசைஞானி இளையராஜா வருகை தந்தார். இதையடுத்து விநாயகர். அண்ணாமலையார், மூலவர் உள்ளிட்ட சன்னதிகளை தரிசனம் செய்தார். இதைத் தொடர்ந்து இசைஞானி இளையராஜாவிற்கு திருக்கோவில் நிர்வாகம் சார்பாக மலை அணிவித்து சாமி பிரசாதம் வழங்கப்பட்டது.


  • 19 Aug 2025 10:32 AM IST

    3 நாள் பயணமாக ரஷியா செல்கிறார் வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர்


    மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் இன்று ரஷியா செல்ல உள்ளார். 3 நாள் பயணமாக ரஷியா செல்லும் ஜெய்சங்கர், அந்நாட்டு வெளியுறவு மந்திரி செர்ஜி லாவ்ராவை சந்தித்து பேச உள்ளார். அதைத் தொடர்ந்து, மாஸ்கோவில் நடைபெறும் இந்தியா-ரஷியா வணிக மன்றக் கூட்டத்தில் உரையாற்றுகிறார்.


  • 19 Aug 2025 10:07 AM IST

    கரையை கடந்தது காற்றழுத்த தாழ்வு மண்டலம்

    வடமேற்கு மற்றும் வடக்கு ஆந்திரா தெற்கு ஒடிசா கடலோரப் பகுதிகளில் மையம் கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், மணிக்கு 7 கிமீ வேகத்தில் நகர்ந்து கோபால்பூர் அருகே இன்று அதிகாலை கரையை கடந்தது.

    இது அடுத்த 6 மணி நேரத்தில் வடமேற்கு திசையில் தெற்கு ஒடிசா தெற்கு சட்டீஸ்கர் வழியே நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழக்கக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

1 More update

Next Story