இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 19-10-2025


தினத்தந்தி 19 Oct 2025 9:37 AM IST (Updated: 19 Oct 2025 8:13 PM IST)
t-max-icont-min-icon

உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.


Live Updates

  • 19 Oct 2025 5:16 PM IST

    தமிழகத்தில் 29 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு

    தமிழகத்தில் 29 மாவட்டங்களில் இன்று இரவு 7 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    அதன்படி செங்கல்பட்டு, சென்னை, கோயம்புத்தூர், கடலூர், தர்மபுரி, திண்டுக்கல், ஈரோடு, கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், கன்னியாகுமரி, மதுரை, நாகப்பட்டினம், நாமக்கல், பெரம்பலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், ராணிப்பேட்டை, சேலம், தென்காசி, தேனி, நீலகிரி, திருவள்ளூர், திருவாரூர், தூத்துக்குடி, திருச்சி, திருநெல்வேலி, திருப்பத்தூர், திருவண்ணாமலை மற்றும் விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • 19 Oct 2025 4:57 PM IST

    பகத் பாசிலின் முதல் தெலுங்கு படம்...ஒன்றரை வருடத்திற்கு பிறகு தொடங்கிய படப்பிடிப்பு

    புஷ்பா படத்தின் மூலம் தெலுங்கு ரசிகர்கள் மனதில் இடம்பிடித்த பகத் பாசில் தற்போது தெலுங்கில் கதாநாயகனாக அறிமுகமாக போகிறார். அவர் நடிக்கும் முதல் தெலுங்கு படத்தின் படப்பிடிப்பு துவங்கி இருக்கிறது.

  • 19 Oct 2025 4:55 PM IST

    ’சூர்யா47’: முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கும் நட்சத்திர ஜோடி?

    தேசிய விருது பெற்ற நடிகர் சூர்யாவின் 47வது படம் குறித்த அப்டேட்டுக்காக அவரது ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள். தற்காலிகமாக சூர்யா 47 என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தை, ஆவேசம் படத்தை இயக்கிய ஜித்து மாதவன் இயக்கவுள்ளதாக தெரிகிறது.

  • 19 Oct 2025 4:50 PM IST

    இந்தியாவுக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டி: ஆஸ்திரேலியா 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி

    இந்தியாவுக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் ஆஸ்திரேலியா 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

  • 19 Oct 2025 4:49 PM IST

    தேர்தலில் சீட் மறுப்பு; லாலு பிரசாத் வீட்டின்முன் கண்ணீர் விட்டு அழுத கட்சி நிர்வாகி

    பீகாரில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. ஐக்கிய ஜனதா தளம், பாஜக இடையேயான ஆளும் கூட்டணியில் மாநில முதல்-மந்திரியாக நிதிஷ் குமார் செயல்பட்டு வருகிறார். அதேவேளை, எதிர்க்கட்சிகளாக உள்ள ராஷ்டிரிய ஜனதா தளம், காங்கிரஸ் கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொள்ள உள்ளது.

    இதில், மதுபன் தொகுதியில் ராஷ்டிரிய ஜனதா தளம் வேட்பாளராக அந்த தொகுதியை சேர்ந்த மூத்த நிர்வாகி மதன் ஷாவுக்கு சீட் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தேர்தலில் போட்டியிட மதன் ஷாவுக்கு சீட் வழங்கப்படவில்லை. அவருக்கு பதிலாக சந்தோஷ் என்பவருக்கு சீட் வழங்கப்பட்டது. இதனால் விரக்தியடைந்த மதன் ஷா இன்று ராஷ்டிரிய ஜனதா தளம் தலைவர் லாலு பிரசாத்தின் வீட்டிற்கு சென்றுள்ளார்.

  • 19 Oct 2025 4:22 PM IST

    வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் தீவிரம்; காற்றழுத்த தாழ்வு பகுதி 21-ந்தேதி உருவாகும்

    சூறாவளி காற்று மணிக்கு 35 முதல் 45 கி.மீ. வேகத்தில் வீச கூடும். ஆழ்கடலுக்கு சென்ற மீனவர்கள் 21-ந்தேதி காலைக்குள் கரை திரும்ப வேண்டும் என கூறியுள்ளார். 24-ந்தேதி வரை தமிழகத்தின் அநேக இடங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் மழை பெய்ய கூடும். இடி, மின்னலின்போது மக்கள் பாதுகாப்புடனும் எச்சரிக்கையுடனும் இருக்க வேண்டும்.

    நாளை வட கிழக்கு தமிழகம் முழுவதும் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. அடுத்த 6 நாடகளுக்கு தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்றார். தொடர்ந்து அவர், தமிழகத்தில் கோவை, ஈரோடு, திருப்பூர், நீலகிரி உள்பட 11 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என கூறியுள்ளார்.

  • 19 Oct 2025 3:57 PM IST

    வயதான நபரால் பாலியல் துன்புறுத்தல்...நினைவு கூர்ந்த பிரபல நடிகை

    சமீபத்தில், ஒரு கதாநாயகி தனக்கு நடந்த ஒரு கசப்பான அனுபவத்தை பகிர்ந்தார். தனது தந்தையை விட வயது அதிகமான ஒருவர் தனது அந்தரங்க உறுப்புகளைப் பற்றி மோசமாகப் பேசியதாகக் கூறி அதிர்ச்சிக்குள்ளாக்கினார். 

  • 19 Oct 2025 3:54 PM IST

    ’4 ஆண்டுகளாக பிக் பாஸ் வீட்டிற்குள் செல்ல முயற்சிக்கிறேன்’... கூறும் பிரபல நடிகை

    பிக் பாஸ் சென்ற பலர் இப்போது பிஸியான வாழ்க்கையை வாழ்ந்து வருகின்றனர். சிலர் படங்களில் நடித்து வருகின்றனர், சிலர் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் சமூக ஊடகங்களில் பிஸியாகிவிட்டனர். 

  • 19 Oct 2025 3:43 PM IST

    தமிழகத்தில் கோவை, ஈரோடு, திருப்பூர், நீலகிரி உள்பட 11 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. 24-ந்தேதி வரை தமிழகத்தின் அநேக இடங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் மழை பெய்ய கூடும்.

  • 19 Oct 2025 3:02 PM IST

    திருப்பதி மலைப்பாதையில் பாறை சரிவு; பக்தர்களுக்கு எச்சரிக்கை

    ஆந்திர பிரதேசத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழையால் பல்வேறு இடங்களில் வெள்ளம் தேங்கி காணப்படுகிறது. நெல்லூர், சித்தூர், விஜயநகரம், குண்டூர், பிரகாசம் மற்றும் திருப்பதி உள்ளிட்ட இடங்களில் இன்று இடியுடன் கூடிய மழை பெய்ய கூடும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    நாளை மறுநாள் (21-ந்தேதி) முதல் பருவநிலை தீவிரமடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், கடந்த சில நாட்களாக திருப்பதியில் தொடர் மழை பெய்து வருகிறது.

1 More update

Next Story