திருப்பதி மலைப்பாதையில் பாறை சரிவு; பக்தர்களுக்கு எச்சரிக்கை

தொடர் விடுமுறையை முன்னிட்டு பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய திருப்பதி கோவிலுக்கு அதிக அளவில் செல்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
திருப்பதி மலைப்பாதையில் பாறை சரிவு; பக்தர்களுக்கு எச்சரிக்கை
Published on

திருப்பதி,

ஆந்திர பிரதேசத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழையால் பல்வேறு இடங்களில் வெள்ளம் தேங்கி காணப்படுகிறது. நெல்லூர், சித்தூர், விஜயநகரம், குண்டூர், பிரகாசம் மற்றும் திருப்பதி உள்ளிட்ட இடங்களில் இன்று இடியுடன் கூடிய மழை பெய்ய கூடும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

நாளை மறுநாள் (21-ந்தேதி) முதல் பருவநிலை தீவிரமடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், கடந்த சில நாட்களாக திருப்பதியில் தொடர் மழை பெய்து வருகிறது.

இதனால், திருப்பதி மலைப்பாதையில் பாறைகள் சரிந்து உள்ளன. இதனை முன்னிட்டு, திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு செல்லக்கூடிய பக்தர்கள் எச்சரிக்கையுடன் பயணிக்கும்படி திருப்பதி தேவஸ்தானம் அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.

வார இறுதி நாட்கள் மற்றும் தீபாவளி பண்டிகை உள்ளிட்டவற்றை முன்னிட்டு தொடர் விடுமுறை விடப்பட்டு உள்ளது. இதனால், பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய திருப்பதி கோவிலுக்கு அதிக அளவில் செல்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் திருப்பதி செல்லும் மலைப்பாதையில் பாறைகள் சரிந்து உள்ளன. அதனால், பக்தர்கள் கவனத்துடன் செல்லும்படி அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com