இன்றைய முக்கியச் செய்திகள்.. சில வரிகளில்.. 21-09-2025

உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Live Updates
- 21 Sept 2025 9:17 AM IST
திருப்பதி கோவிலில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்: 24 மணி நேரம் காத்திருந்து தரிசனம்
புரட்டாசி மாத முதல் சனிக்கிழமையையொட்டி திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. 24 மணிநேரம் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.புரட்டாசி மாத முதல் சனிக்கிழமையையொட்டி நேற்று திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காக ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்தனர். இதனால் திருமலை முழுவதும் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
- 21 Sept 2025 9:16 AM IST
விஜயகாந்த் ஏற்படுத்தியதைவிட விஜய் அதிகமான தாக்கத்தை ஏற்படுத்துவார் - டி.டி.வி.தினகரன் பேட்டி
2006-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் விஜயகாந்த் ஏற்படுத்திய தாக்கத்தைவிட வருகிற 2026-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் விஜய் அதிகமான தாக்கத்தை ஏற்படுத்துவார். விஜயகாந்த் வருகையால் திமுகவும், அதிமுகவும் பல தொகுதிகளில் வெற்றி வாய்ப்பை இழந்தது என்று டி.டி.வி.தினகரன் கூறினார்.
- 21 Sept 2025 9:13 AM IST
வார விடுமுறை: கன்னியாகுமரியில் குவிந்த சுற்றுலா பயணிகள்
கடலின் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்தை படகில் சென்று சுற்றுலா பயணிகள் உற்சாகத்துடன் கண்டு களித்து வருகின்றனர். சுற்றுலா பயணிகளின் வருகையால் கன்னியாகுமரியில் காந்தி நினைவு மண்டபம், காமராஜர் மணிமண்டபம், அரசு அருங்காட்சியகம், கலங்கரை விளக்கம், விவேகானந்தா கேந்திர வளாகத்தில் அமைந்துள்ள பாரத மாதா கோவில், ராமாயண தரிசன சித்திர கண்காட்சி கூடம், மீன்காட்சி சாலை, அரசு பழத்தோட்டம், சுற்றுச்சூழல் பூங்கா, திருப்பதி வெங்கடாசலபதி கோவில் போன்றவற்றில் அதிகாலை முதலே கூட்டம் நிரம்பி வழிகிறது.
- 21 Sept 2025 9:11 AM IST
இந்த ராசியினருக்கு இன்று திருமண பேச்சுவார்த்தைகள் சாதகமாகும் - ராசிபலன் 21.09.2025
துலாம்
வங்கியில் இருந்து கடன் உதவி கிடைக்கும். வியாபாரம் சீராகவும், சாதகமாகவும் இருக்கும். கொடுக்கல், வாங்கல் கைகொடுக்கும். வீடு, நிலபுலன்களை விற்பதற்காக எடுத்த முயற்சிகள் வெற்றி அடையும். மகள் கர்ப்ப சம்பந்தமாக இனிக்கும் செய்தி கிடைக்கும். தேகம் சிறக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: ரோஸ்










