இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 30-01-2025

உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Live Updates
- 30 Jan 2025 9:18 AM IST
கும்ப மேளாவில் 30 பேர் உயிரிழந்த சோகம்: பக்தர்களுக்கு யோகி ஆதித்யநாத் விடுத்த வேண்டுகோள்
உத்தர பிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் கூறுகையில், “நெரிசலை தவிர்க்க பக்தர்கள் அருகில் உள்ள கங்கை நதிக்கரையில் நீராட வேண்டும். கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா 25 லட்சம் நிவாரணம் வழங்கப்படும். முதல்-மந்திரி கட்டுப்பாட்டு அறை, தலைமைச் செயலர் கட்டுப்பாட்டு அறை, டி.ஜி.பி. கட்டுப்பாட்டு அறைகளில் இருந்து நாள் முழுவதும் கும்பமேளா நிகழ்வுகளை கண்காணித்து வருகிறோம். கும்பமேளாவில் கூட்ட நெரிசல் ஏற்பட்ட சூழலில், தற்போது நிலைமை கட்டுக்குள் உள்ளது" என்று அவர் கூறினார்.
- 30 Jan 2025 9:15 AM IST
அடுத்த 5 ஆண்டுகளில் மேலும் 100 ராக்கெட்களை விண்ணில் செலுத்த இலக்கு: இஸ்ரோ தலைவர் தகவல்
100 ராக்கெட்டுகள் ஏவுவதற்கு 46 ஆண்டுகள் எடுத்துக்கொள்ளப்பட்டு உள்ளன. தற்போது போதிய கட்டமைப்பு உள்ளிட்ட பல்வேறு வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வரும் நிலையில் மேலும் 100 ராக்கெட்டுகளை வரும் 5 ஆண்டுகளில் ஏவ வாய்ப்பு உள்ளது. விண்வெளித்துறையில் தற்சார்பை நோக்கி இஸ்ரோ முன்னேறி வருகிறது என்று இஸ்ரோ தலைவர் நாராயணன் கூறினார்.
- 30 Jan 2025 9:11 AM IST
சுனிதா வில்லியம்சை பத்திரமாக பூமிக்கு அழைத்துவர எலான் மஸ்க் உதவியை நாடிய டிரம்ப்
அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்றுள்ள டிரம்ப், விண்வெளியில் சிக்கியுள்ள சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகிய இருவரையும் பத்திரமாக பூமிக்கு அழைத்துவர டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரியான எலான் மஸ்க்கின் உதவியை நாடியுள்ளார்.









