இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 16-12-2024

உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்
Live Updates
- 16 Dec 2024 3:23 PM IST
மீனவர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண விருப்பம்.. மோடி முன்னிலையில் இலங்கை அதிபர் பேட்டி
இந்தியாவிற்கு வருகை தந்துள்ள இலங்கை அதிபராக அநுர குமார திசநாயக இன்று பிரதமர் மோடியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். அதன்பின்னர் பிரதமர் மோடி, இலங்கை அதிபர் அநுர குமார இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.
அப்போது, அநுர குமார பேசும்போது, “இரு நாடுகளுக்கும் மிகப்பெரிய சிக்கலாக மாறியுள்ள மீனவர் பிரச்சினைக்கு நிரந்தர மற்றும் நிலையான தீர்வைக் காண விரும்புகிறோம். அந்த பகுதியில் உள்ள மீனவர்களால் இழுவை படகுகள் மூலம் மீன்பிடிக்கும் முறைகள் பின்பற்றப்பட்டு வருகின்றன. அது இத்தொழிலுக்கு அழிவை ஏற்படுத்தும் என்பதால் அதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்” என்றார்.
- 16 Dec 2024 3:17 PM IST
முதல்-அமைச்சர் , துணை முதல்-அமைச்சர் எல்லா சூழலிலும் உதவியாக இருந்தனர்: குகேஷ் பேட்டி
- 16 Dec 2024 2:44 PM IST
மயோட் தீவை சூறையாடிய சிடோ புயல்... 1,000 பேர் பலி?
பிரான்ஸ் கட்டுப்பாட்டில் உள்ள மயோட் தீவை நேற்று சிடோ என்ற புயல் தாக்கியது. அப்போது மணிக்கு 124 மைல் வேகத்தில் காற்று வீசியது. கனமழையும் வெளுத்து வாங்கியது. இந்த புயலால் பல வீடுகள் இடிந்து விழுந்து தரைமட்டமாகின. மின்கம்பங்கள் சாய்ந்தன. சாலைகள், கட்டிடங்கள் உள்பட பல்வேறு உள்கட்டமைப்புகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. புயல், மழைக்கு சுமார் 1,000 பேர் பலியாகியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
- 16 Dec 2024 2:42 PM IST
மணிப்பூரில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் கொலை: முதல்-மந்திரி நிவாரணம் அறிவிப்பு
- 16 Dec 2024 2:31 PM IST
தெற்கு காசாவில் பள்ளிக்கூடம் மீது இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் - 20 பேர் பலி
தெற்கு காசாவின் கான் யூனிஸ் நகருக்கு அருகில் உள்ள ஒரு பள்ளிக்கூடத்தின் மீது இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் குழந்தைகள் உள்பட 20 பேர் கொல்லப்பட்டனர். மேலும் சிலர் காயமடைந்தனர்.
- 16 Dec 2024 1:41 PM IST
பிரிஸ்பேன் டெஸ்ட்: பேட்டிங்கில் இந்திய அணி தடுமாற்றம்.. 3ம் நாள் முடிவில் 51-4
ஆஸ்திரேலிய அணியின் அபார பந்துவீச்சால் இந்திய அணி பேட்டிங்கில் தடுமாறியது. அடிக்கடி மழை குறுக்கிட்டதால் இன்றைய நாள் ஆட்டம் பெரிதும் பாதிக்கப்பட்டது. மழை பாதிப்பு மற்றும் போதிய வெளிச்சமின்மை காரணமாக இன்றைய நாள் ஆட்டம் முடித்துக்கொள்ளப்பட்டது. முடிவில் இந்திய அணி 17 ஓவர்களை எதிர்கொண்டு 4 விக்கெட்டுகளை இழந்து 51 ரன்களை எடுத்துள்ளது. கே.எல்.ராகுல் 33 ரன்களுடனும், கேப்டன் ரோகித் சர்மா ரன் ஏதும் எடுக்காமலும் களத்தில் உள்ளனர். இந்திய அணி, ஆஸ்திரேலியாவை விட 394 ரன்கள் பின் தங்கியுள்ளது. பாலோ ஆன் ஆவதை தவிர்க்கவே இந்திய அணிக்கு இன்னும் 194 ரன்கள் தேவை என்ற நிலை உள்ளது.
- 16 Dec 2024 1:16 PM IST
நீண்ட காலம் செஸ் போட்டிகளில் விளையாட வேண்டும் என்பது எனது விருப்பம்; இளம் வயதில் உலக சாம்பியன் ஆனது மகிழ்ச்சி அளிக்கிறது- உலக செஸ் சாம்பியன் போட்டியில் வென்றது குறித்து சென்னையில் குகேஷ் பேட்டி








