இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்... 02-11-2025


தினத்தந்தி 2 Nov 2025 9:42 AM IST (Updated: 2 Nov 2025 8:02 PM IST)
t-max-icont-min-icon

உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.


Live Updates

  • ஏரியில் குளிக்கச் சென்ற இருவர் நீரில் மூழ்கி மாயம்
    2 Nov 2025 7:36 PM IST

    ஏரியில் குளிக்கச் சென்ற இருவர் நீரில் மூழ்கி மாயம்

    காஞ்சிபுரம் அருகே ஏரியில் குளிக்கச் சென்ற தாமல் கிராமத்தைச் சேர்ந்த பாலா, மணவாளன் ஆகிய இருவரும் நீரில் மூழ்கி மாயமாகினர். தீவிர தேடுதல் பணியில் தீயணைப்புத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

  • இஸ்ரோ தலைவர் பாராட்டு
    2 Nov 2025 6:51 PM IST

    இஸ்ரோ தலைவர் பாராட்டு

    இஸ்ரோ மிகப்பெரிய செயற்கைக்கோளை விண்ணில் ஏவி சாதனை படைத்துள்ளது. இந்தியாவின் உள்நாட்டு தயாரிப்பிற்கு இந்த சாதனை சிறந்த உதாரணம். வெற்றிகரமாக சுற்றுவட்ட பாதையில் சி.எம்.எஸ்-03 நிலை நிறுத்தப்பட்டது.15 வருடத்திற்கு தொலை தொடர்பை உறுதி செய்யும் வகையில் செயற்கைக்கோள் வடிவமைக்கப்பட்டுள்ளதாக இஸ்ரோ குழுவினருக்கு எனது மனமார்ந்த பாராட்டுகள் என இஸ்ரோ தலைவர் நாராயணன் கூறியுள்ளார்.

  • போட்டியை ரசிக்கும் ஜெய் ஷா, சச்சின் டெண்டுல்கர்
    2 Nov 2025 6:07 PM IST

    போட்டியை ரசிக்கும் ஜெய் ஷா, சச்சின் டெண்டுல்கர்

    நவி மும்பையில் மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை இறுதிப்போட்டியை கண்டு ரசிக்கும் ஐசிசி தலைவர் ஜெய் ஷா, இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர்.

  • பிரதமர் மோடியால் மட்டுமே பீகாரை முன்னோக்கி கொண்டு செல்ல முடியும் - அமித்ஷா
    2 Nov 2025 6:03 PM IST

    பிரதமர் மோடியால் மட்டுமே பீகாரை முன்னோக்கி கொண்டு செல்ல முடியும் - அமித்ஷா

    தங்கள் மகள் மற்றும் மகன்களை மட்டுமே முதல்-மந்திரியாகவோ, பிரதமராகவோ ஆக்க விரும்புபவர்கள், பீகாரை முன்னோக்கி கொண்டு செல்ல முடியுமா?; பீகார் முதல்-மந்திரி நிதிஷ் குமார், பிரதமர் மோடியால் மட்டுமே பீகாரை முன்னோக்கி கொண்டு செல்ல முடியும் என மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா கூறியுள்ளார்.

  • விண்ணில் பாய்ந்தது சிம்எஸ்எஸ் -3  செயற்கைக்கோள்
    2 Nov 2025 5:32 PM IST

    விண்ணில் பாய்ந்தது சிம்எஸ்எஸ் -3 செயற்கைக்கோள்

    ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து எல்விஎம்-3 ராக்கெட் மூலம் விண்ணில் பாய்ந்தது சிம்எஸ்எஸ் - 3 செயற்கைக்கோள். கடற்படை, ராணுவ பயன்பாட்டுக்கான சிம் எஸ் -03 செயற்கைக்கோள் ரூ.1,600 கோடியில் வடிவமைக்கப்பட்டுள்ளது.குறைந்தபட்சம் 170 கி.மீ முதல் அதிகபட்சம் 29,970 கி.மீ தொலைவு புவி சுற்றுவட்ட பாதையில் நிலை நிறுத்த திட்டம். இந்தியாவில் இருந்து அனுப்பட்ட எடை அதிகமுள்ள செயற்கைக்கோள் என்பதால் பாகுபலி ராக்கெட் எனப்படுகிறது.

  • நைஜீரியா மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தும் - டிரம்ப் எச்சரிக்கை
    2 Nov 2025 4:17 PM IST

    நைஜீரியா மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தும் - டிரம்ப் எச்சரிக்கை

    நைஜீரியாவில் கிறிஸ்தவர்கள் படுகொலை செய்யப்படுவதாகவும், அதை அந்நாட்டு அரசு தடுக்கவில்லை என்றால், ராணுவத் தாக்குதல் நடத்துவேன் எனவும் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். Boko Haram போன்ற தீவிரவாத குழுக்கள் பல ஆண்டுகளாக அந்நாட்டில் தாக்குதல்களை நடத்தி வருகின்றன. அவர்களால் அனைத்து மதத்தினருக்கும் பாதிப்புதான் என நைஜீரியா கூறுகிறது.

  • பெங்களூருவில் ஆம்புலன்ஸ் மோதி 2 பேர் உயிரிழப்பு
    2 Nov 2025 4:14 PM IST

    பெங்களூருவில் ஆம்புலன்ஸ் மோதி 2 பேர் உயிரிழப்பு

    பெங்களூரு ரிச்மண்ட் பகுதியில் நேற்று இரவு வேகமாக வந்த ஆம்புலன்ஸ், 3 இருசக்கர வாகனங்கள் மீது மோதியதில் 2 பேர் உயிரிழந்தனர். பலர் காயம் அடைந்துள்ளனர். ஆம்புலன்ஸ் ஓட்டுநர் கைது செய்யப்பட்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆம்புலன்ஸ் மீது மோதிய பைக் ஒன்று 50 மீ தூரம் வரை இழுத்துச் செல்லப்பட்டு, போலீஸ் பூத் மீது மோதி நின்றது.

  • இறுதிப்போட்டி நடைபெறும் நவி மும்பையில் கனமழை
    2 Nov 2025 4:08 PM IST

    இறுதிப்போட்டி நடைபெறும் நவி மும்பையில் கனமழை

    மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டி நடைபெறும் நவி மும்பையில் கனமழையால் டாஸ் தாமதம் - போட்டி தொடங்குவதிலும் தாமதம் ஏற்பட்டுள்ளது.

  • இந்திய ஆடவர் அணிக்கு 187 ரன்கள் இலக்கு
    2 Nov 2025 4:07 PM IST

    இந்திய ஆடவர் அணிக்கு 187 ரன்கள் இலக்கு

    இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 3வது டி20 கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது. முதலில் ஆடிய ஆஸ்திரேலிய அணி 6 விக்கெட் இழப்புக்கு 186 ரன்கள் குவித்தது. இந்திய அணி சார்பில் அர்ஷ்தீப் சிங் 3, வருண் 2, சிவம் தூபே 1 விக்கெட்கள் வீழ்த்தினர்.

  • ஈபிஎஸ் தலைமையில் அதிமுக பொறுப்பாளர்கள் ஆலோசனை
    2 Nov 2025 4:04 PM IST

    ஈபிஎஸ் தலைமையில் அதிமுக பொறுப்பாளர்கள் ஆலோசனை

    சென்னை ராயப்பேட்டையில் அதிமுக பொதுச்செயலாளர் ஈபிஎஸ் தலைமையில் மாவட்ட பொறுப்பாளர்கள் ஆலோசனை கூட்டம் தொடங்கி உள்ளது.கூட்டத்தில் பாக முகவர்களுக்கான பணிகள் குறித்து விவாதிக்க திட்டம் என கூறப்படுகிறது. வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகள் தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது. பல்வேறு முக்கிய அறிவுறுத்தல்களை நிர்வாகிகளுக்கு ஈபிஎஸ் வழங்க வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

1 More update

Next Story