இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்... 02-11-2025
உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Live Updates
- 2 Nov 2025 3:21 PM IST
திருமணத்திற்கு 100 சவரன்
கபடி வீராங்கனை கார்த்திகாவுக்கு ஒரு லட்சம் ரூபாய் வழங்கி வாழ்த்தினார் நடிகர் மன்சூர் அலிகான். ஒலிம்பிக்கில் தங்கம் வென்றால் திருமணத்திற்கு 100 சவரன் நகை போடுவதாகவும் வாக்குறுதி அளித்துள்ளார்.
- 2 Nov 2025 3:20 PM IST
மெக்சிகோவில் சூப்பர் மார்க்கெட்டில் வெடிவிபத்து
மெக்சிகோவில் வணிக வளாகத்தில் நிகழ்ந்த பயங்கர வெடி விபத்தில் 23 பேர் உயிரிழந்தனர். இறந்தவர்களில் பெரும்பாலானவர்கள் குழந்தைகள் என கண்டறியப்பட்ட நிலையில் விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
- 2 Nov 2025 1:20 PM IST
எஸ்.ஐ.ஆர். விவகாரம்: சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு; அனைத்து கட்சி கூட்டத்தில் தீர்மானம்
நேர்மையான தேர்தல் நடத்த உண்மையான வாக்காளர் பட்டியல் அவசியம். இதனை யாரும் மறுக்கவில்லை. ஆனால் அதற்கு உரிய கால அவகாசம் கொடுக்கப்பட வேண்டும். அதனை விடுத்து தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன்பு முழுமையான திருத்த பணிகளை செய்ய நினைப்பது உண்மையான வாக்காளர்களை நீக்கும் தந்திரம் மட்டுமே என்று பேசியுள்ளார். அதனால், நம்முடைய எதிர்ப்பை வெளிப்படுத்த வேண்டியது முக்கிய தேவையாக உள்ளது என்றும் பேசியுள்ளார்.
இதனை தொடர்ந்து, பல்வேறு கட்சிகளை சேர்ந்த தலைவர்களும் கூட்டத்தில் பேசினர். இதன்பின்னர் கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டு உள்ளன. இதன்படி, எஸ்.ஐ.ஆர். நடவடிக்கைகளை தேர்தல் ஆணையம் நிறுத்தி வைக்க வேண்டும். அப்படி இல்லாவிட்டால், சுப்ரீம் கோர்ட்டில் அனைத்து கட்சிகளும் வழக்குகள் தாக்கல் செய்யும் என்று அனைத்துக்கட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது.
- 2 Nov 2025 12:34 PM IST
எஸ்.ஐ.ஆர். விவகாரம்; அனைத்து கட்சி கூட்டம் ஏன்? முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் விளக்கம்
கூட்டத்தில் பங்கேற்றிருந்த தலைவர்கள் முன்னிலையில் பேசிய முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் அனைத்து கட்சி கூட்டம் நடத்தப்படுவதன் அவசியம் பற்றி விளக்கி கூறினார். அவர் பேசும்போது, பீகாரில், பொதுமக்களின் வாக்குரிமையை பறிக்கும் வகையிலும், அவர்களை அச்சுறுத்தும் விதத்திலும் வாக்களார் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகள் நடைபெற்றன. அதுபோல தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களிலும் நடைபெற உள்ளது. இதற்கு எதிராக தமிழ்நாடு தனது எதிர்ப்பை வெளிப்படுத்த வேண்டியது முக்கிய தேவையாக உள்ளது என பேசினார்.
நேர்மையான தேர்தல் நடத்த உண்மையான வாக்காளர் பட்டியல் அவசியம். இதனை யாரும் மறுக்கவில்லை. ஆனால் அதற்கு உரிய கால அவகாசம் கொடுக்கப்பட வேண்டும். அதனை விடுத்து தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன்பு முழுமையான திருத்த பணிகளை செய்ய நினைப்பது உண்மையான வாக்காளர்களை நீக்கும் தந்திரம் மட்டுமே என்று பேசியுள்ளார். அதனால், நம்முடைய எதிர்ப்பை வெளிப்படுத்த வேண்டியது முக்கிய தேவையாக உள்ளது என்றும் பேசியுள்ளார்.
- 2 Nov 2025 12:04 PM IST
கரூர் துயர சம்பவம்; 10 பேர் சி.பி.ஐ. விசாரணைக்கு ஆஜர்
கரூரில் வேலுசாமிபுரம் பகுதியில் த.வெ.க. தலைவர் விஜய் கடந்த செப்டம்பர் 27-ந்தேதி மேற்கொண்ட பிரசாரத்தின்போது, ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியானார்கள். இந்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த துயர சம்பவம் தொடர்பாக வேலுச்சாமிபுரத்தில் 10 பேர் சி.பி.ஐ. விசாரணைக்காக ஆஜராகி உள்ளனர்.
- 2 Nov 2025 11:32 AM IST
கரூர் சம்பவம் தொடர்பாக நடிகர் அஜித் கருத்து; உதயநிதி ஸ்டாலின் கூறியது என்ன...?
துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம், கரூர் சம்பவம் பற்றிய நடிகர் அஜித்தின் கருத்து குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த அவர், முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்பே இதற்கு பதில் அளித்து இருக்கிறார். நானும் தெளிவாக பேட்டி அளித்து இருக்கிறேன். ஒவ்வொருவருக்கும் பொறுப்பு இருக்கிறது. இதுபற்றி பல்வேறு கட்சி தலைவர்களும் பதில் அளித்துள்ளனர் என கூறினார்.
- 2 Nov 2025 11:00 AM IST
எஸ்.ஐ.ஆர். விவகாரம்: முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் தொடக்கம்
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகள் பங்கேற்கும் அனைத்து கட்சி கூட்டம் இன்று காலை 10.00 மணி அளவில், தியாகராய நகரில் உள்ள "ஓட்டல் அகார்டில்" தொடங்கியுள்ளது. எனினும், இந்த கூட்டத்தில் பங்கேற்காமல் விஜய் தலைமையிலான த.வெ.க. புறக்கணித்து உள்ளது. எனினும், கருணாஸ் தலைமையிலான முக்குலத்தோர் புலிப்படை மற்றும் தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை தலைவர் மற்றும் காங்கேயம் தொகுதி எம்.எல்.ஏ.வான தனியரசு ஆகியோர் கூட்டத்தில் பங்கேற்கின்றனர்.
- 2 Nov 2025 10:19 AM IST
மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம்: தவெக புறக்கணிப்பு
தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப்பணிகள் வருகிற 4-ம் தேதி முதல் தொடங்கப்படும் என்று தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது. இதற்கு திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.இது தொடர்பாக விவாதிக்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று அனைத்து கட்சி கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
- 2 Nov 2025 10:18 AM IST
வங்கக்கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி: வானிலை மையம் அறிவிப்பு
வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது என இந்திய வானிலை மையம் இன்று அறிவித்து உள்ளது.
- 2 Nov 2025 9:50 AM IST
சண்டே ஸ்பெஷல்: 'டூ இன் ஒன்' குழம்பு மசாலா தயாரிப்பது எப்படி?
இந்த வாரம் பேச்சுலர்ஸ் சமையல் டிப்ஸ் பகுதியில் ' டூ இன் ஒன்' குழம்பு மசாலா தயாரிப்பது எப்படி? என்பதை பற்றி பார்க்கப்போகிறோம். அது என்ன ' டூ இன் ஒன்' குழம்பு மசாலா என்று நீங்கள் கேட்கலாம். சாம்பாருக்கும் இதே மசாலா பொடியை பயன்படுத்தலாம். மற்ற குழம்புகளுக்கும் இந்த மசாலா பொடியை சேர்க்கலாம். அடுத்தடுத்து நாம் சாம்பார், மற்ற குழம்புகள் எப்படி செய்வது? என்பதை பற்றி பார்க்க இருக்கிறோம். அதனால், அதற்கு முன்னதாக குழம்பு மசாலா பொடியை தயாரிப்பது எப்படி? என்பதை பற்றி பார்ப்போம். அதற்கு தேவையான பொருட்கள் என்னவென்பதை முதலில் தெரிந்துகொள்வோம்.


















