இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில் 04-05-2025

உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Live Updates
- 4 May 2025 6:02 PM IST
தொழிலதிபர் கொலை வழக்கு - முக்கிய குற்றவாளி கைது
- துபாயை சேர்ந்த தொழிலதிபர் சிகாமணி கோவையில் கொலை செய்யப்பட்ட விவகாரம்
- கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளி சாரதா கைது
- கொலை வழக்கில் சாரதா வெளிநாடு தப்பி செல்லாமல் இருக்க லுக்-அவுட் நோட்டீஸ் வழங்கப்பட்டிருந்தது
- கோவையில் பதுங்கி இருந்த சாரதாவை தனிப்படை போலீசார் கைது செய்தனர்
- சாரதாவுடன் கடந்த மாதம் 22 ம் தேதி கோவை வந்த தொழிலதிபர் சிகாமணி கொலை செய்யப்பட்டார்
- சிகாமணியை கொலை செய்து விட்டு மீண்டும் துபாய் சென்ற சாரதா கடந்த 28ம் தேதி துபாயில் இருந்து சென்னை வந்தார்
- 4 May 2025 6:02 PM IST
நிறைவடைந்தது நீட் தேர்வு
நாடு முழுவதும் நடைபெற்ற இளநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு நிறைவு
நாடு முழுவதும் சுமார் 22 லட்சம் மாணவர்கள் பங்கேற்று நீட் தேர்வை எழுதினர்
தமிழகத்தில் சென்னை, மதுரை, திருச்சி உள்பட 31 மாவட்டங்களில் நீட் தேர்வு நடைபெற்றது
சென்னையில் மட்டும் 44 தேர்வு மையங்களில் மாணவர்கள் நீட் தேர்வை எழுதினர்
- 4 May 2025 5:28 PM IST
மும்பை விமான நிலையத்தில்ரசிகருடன் செல்பி எடுக்க மறுத்த அல்லு அர்ஜுன்
திருப்பதி,
நடிகர் அல்லு அர்ஜுன் சினிமா படப்பிடிப்பு சம்பந்தமாக மும்பை சென்றிருந்தார். அங்கிருந்து விமானம் மூலம் ஐதராபாத் புறப்பட தயாரானார்.மும்பை விமான நிலையத்தில் அவர் தனது பாதுகாவலர்களுடன் நடந்து சென்றார். அப்போது ரசிகர் ஒருவர் வேகமாக ஓடி சென்று அல்லு அர்ஜுன் அருகே நின்று செல்பி எடுக்க முயன்றார். இதற்கு அல்லு அர்ஜுன் எதிர்ப்பு தெரிவித்து விட்டு வேகமாக சென்றார்.
இதனை தொடர்ந்து அவருடைய பாதுகாவலர்கள் அந்த ரசிகரை அப்புறப்படுத்தினர்.அல்லு அர்ஜுன் ரசிகருடன் செல்பி எடுக்க மறுத்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவியது.இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. பல்வேறு தரப்பினர் அல்லு அர்ஜுனுக்கு எதிராக பதிவிட்டு வருகின்றனர்.அல்லு அர்ஜுன் தனது ரசிகருக்காக சில நிமிடங்களை ஒதுக்கியிருக்கலாம்."அவர் மிகவும் போலியான புன்னகை கொண்டவர். அல்லு அர்ஜுன் இன்னும் புஷ்பா கதாபாத்திரத்தில் இருந்து மாறவில்லை. அதே குணத்துடன் இருப்பதாகத் தெரிகிறது என விமர்சித்தனர். இதற்கு அல்லு அர்ஜுனின் ரசிகர்கள் பதிலடி கொடுத்து வருகின்றனர்.
- 4 May 2025 4:31 PM IST
சென்னையில் பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. எழும்பூர், வேப்பேரி, காசிமேடு, ஈக்காட்டு தாங்கல், வடபழனி உள்ளிட்ட இடங்களில் மழை பெய்து வருகிறது.
- 4 May 2025 4:01 PM IST
- தாமதம் - நீட் தேர்வு எழுதாமல் சென்ற மாணவி
- தேர்வு மையத்திற்கு தாமதமாக வந்த மாணவி - நீட் தேர்வு எழுத முடியாமல் சென்ற சோகம்
- ப்ரீத்தி என்ற மாணவி செய்யாறில் இருந்து 1.40 மணிக்கு வந்த நிலையில் மையத்தில் அனுமதி மறுப்பு
- நேரம் கடந்த காரணத்தால் தேர்வு எழுதாமல் திரும்பிச் சென்றார் மாணவி ப்ரீத்தி
- 4 May 2025 3:35 PM IST
- நீட் தேர்வு - ஹால் டிக்கெட்டை மறந்து வந்த மாணவன்
- மதுரையில், நீட் தேர்வுக்கு ஹால் டிக்கெட்டை மறந்து வைத்து விட்டு வந்த மாணவரால் பரபரப்பு
- ஊமச்சிகுளம் அருகே உள்ள யாதவா ஆண்கள் கல்லூரியில் நீட் தேர்வு எழுத வந்த மாணவன், ஹால் டிக்கெட்டை மறந்து வைத்து வந்ததால் பரபரப்பு
- ஹால் டிக்கெட்டை மறந்து வந்த மாணவன் அமர்நாத்துக்கு, கூடல் புதூர் காவலர் விஜயலட்சுமி போன் கொடுத்து உதவி
- காவலர் விஜயலட்சுமி கொடுத்த போன் மூலம் பெற்றோரை தொடர்பு கொண்டு ஹால் டிக்கெட்டை பெற்ற மாணவன்
- 4 May 2025 2:00 PM IST
இன்று கனமழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள் எவை..?
தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன் காரணாமாக, இன்று (04-05-2025): தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய (மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில்) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
- 4 May 2025 1:35 PM IST
அதிர்ச்சி சம்பவம்.. நீட் தேர்வுக்கு தயாராகி வந்த மாணவி தூக்கிட்டு தற்கொலை
நீட் தேர்வு இன்று தொடங்கும் நிலையில் தேர்வுக்கு அஞ்சி மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் நீட் தேர்வு எழுத இருந்த மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
- 4 May 2025 1:34 PM IST
அ.தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணி குறித்த விமர்சனங்களுக்கு தமிழிசை சவுந்தரராஜன் பதில்
இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய பா.ஜ.க. மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், "தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் நீட் தேர்வு நடத்தப்படாது என கூறினர். அவர்கள் ஆட்சிக்கு வந்ததில் இருந்து இன்று 5 வது நீட் தேர்வு நடக்கிறது, தி.மு.க.வை எதிர்த்து நீட் தேர்வு - நீட்டாக நடக்கிறது” என்று கூறினார்.
- 4 May 2025 1:33 PM IST
சற்று நேரத்தில் தொடங்குகிறது நீட் தேர்வு; மாணவர்கள் கடும் சோதனைக்கு பின் அனுமதி
.தமிழகத்தில் தற்போது கடும் வெயில் வாட்டி எடுத்து வருவது தேர்வு எழுத வரும் மாணவர்களுக்கு மேலும் ஒரு சவாலாக உள்ளது. இன்னும் சற்று நேரத்தில் நீட் தேர்வு தொடங்க உள்ள நிலையில், தேர்வு எழுத வந்த மாணவ, மாணவிகள் தீவிர சோதனைக்கு பிறகே தேர்வு அறைக்குள் அனுமதிக்கப்படுகின்றனர்.